search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சப்பாத்திக்கு அருமையான வெள்ளரிக்காய் கூட்டு
    X

    சப்பாத்திக்கு அருமையான வெள்ளரிக்காய் கூட்டு

    சப்பாத்தி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த வெள்ளரிக்காய் கூட்டு. இன்று இந்த கூட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    வெள்ளரிக்காய் - 3, 
    பாசிப்பருப்பு - 1 கப், 
    தேங்காய் - துருவல் - 4 டீஸ்பூன், 
    சீரகம் - 1 டீஸ்பூன், 
    காய்ந்த மிளகாய் - 1, 
    கறிவேப்பிலை - சிறிதளவு, 
    கடுகு, உளுந்தம்பருப்பு - தலா அரை டீஸ்பூன், 
    பெருங்காயத்தூள் - சிறிதளவு, 
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை : 

    வெள்ளரிக்காயை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். 

    பாசிப்பருப்பை குக்கரில் வைத்து வேக வைத்து கொள்ளவும். 

    காய்ந்த மிளகாய், சீரகம், தேங்காய் துருவல் மூன்றையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்து கொள்ளவும். 

    வெள்ளரித்துண்டுகளை உப்பு சேர்த்து வேகவிட்டு, அரைத்து வைத்திருக்கும் தேங்காய் மசாலா மற்றும் வேக வைத்திருக்கும் பாசிப்பருப்பு இரண்டையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடவும்.

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டு தாளித்து வெள்ளரிக்காய் கூட்டில் சேர்த்து நன்கு கலந்து, ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

    அருமையான வெள்ளரிக்காய் கூட்டு ரெடி. 

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×