search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பொங்கல் ஸ்பெஷல்: சேமியா சர்க்கரை பொங்கல்
    X

    பொங்கல் ஸ்பெஷல்: சேமியா சர்க்கரை பொங்கல்

    சேமியாவில் சர்க்கரை பொங்கல் செய்தால் அருமையாக இருக்கும். இந்த பொங்கல் பண்டிகைக்கு சேமியா சர்க்கரை பொங்கல் செய்து வீட்டில் உள்ளவர்களை அசத்துங்கள்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 1 கப்,
    பாசிப்பருப்பு - அரை கப்,
    வெல்லம் - ஒன்றரை கப்,
    நெய் - அரை கப்,
    முந்திரிப்பருப்பு - 20,
    திராட்சை - 20,
    ஏலக்காய்தூள் - 1 டீஸ்பூன்.



    செய்முறை :

    பாசிப்பருப்பை மலர வேக வைத்து எடுத்துக்கொள்ளுங்கள்.

    வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.

    ஒரு கடாயில் 1 ஸ்பூன் நெய் ஊற்றி சேமியாவை போட்டு நன்றாக வாசனை வரும் வரை வறுக்கவும்.

    ஒரு கடாயில் பாதியளவு நெய் ஊற்றி அதில் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து தனியாக எடுத்த பின்னர் அதில் 2 கப் தண்ணீர் சேருங்கள். தண்ணீர் கொதித்ததும் வறுத்த சேமியாவை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு வேகவிடுங்கள்.

    ஒரு பாத்திரத்தில் பொடித்த வெல்லத்தை போட்டு அதில் அரை கப் தண்ணீர் சேர்த்து கரையவிட்டு வடிகட்டி அதை வெந்த சேமியாவில் சேருங்கள்.

    அத்துடன் வேக வைத்த பாசிப்பருப்பையும் போட்டு, நன்கு சேர்ந்து வரும் வரை கைவிடாமல் கிளறுங்கள்.

    கடைசியில் ஏலக்காய் தூள், வறுத்த முந்திரி, திராட்சை, மீதமுள்ள நெய் சேர்த்து நன்கு கிளறி இறக்குங்கள்.

    தித்திப்பான சேமியா சர்க்கரை பொங்கல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×