search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பொங்கல் ஸ்பெஷல்: கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல்
    X

    பொங்கல் ஸ்பெஷல்: கருப்பரிசி சர்க்கரைப் பொங்கல்

    கருப்பரிசி உடலுக்கு மிகவும் நல்லது. இந்த பொங்கல் பண்டிகைக்கு கருப்பரிசியை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் 

    கருப்பரிசி - ஒரு கப்
    உப்பு - துளிக்கும் குறைவாக‌ (சுவைக்காக‌)
    வெல்லம் - ஒரு கப்
    நெய் - தேவையான அளவு
    பால் - 1/4 கப்
    முந்திரி - 10
    பாசிப்பருப்பு - 1/4 கப்
    ஏலக்காய் - 1 
    தேங்காய்ப் துருவல் - சிறிதளவு.



    செய்முறை

    முதலில் பாசிப்பருப்பை வெறும் வாணலில் சூடுவர வறுத்துக்கொள்ளவும். 

    வெல்லத்தை துருவிக்கொள்ளவும்.

    ஏலக்காயைப் பொடித்து வைக்கவும்.

    பருப்புடன் கருப்ப‌ரிசியை சேர்த்துக் நன்றாக கழுவிவிட்டு, ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் இரண்டு கப் தண்ணீர் விட்டு, சிறிது உப்பு போட்டு, நன்றாக வேக வைக்கவும்.

    நன்றாக வெந்த பிறகு பாலை விட்டு தீயை மிதமான தீயில் வைத்துக்கொள்ளவும்.

    பின்பு ஒரு பாத்திரத்தில் துருவிய வெல்லத்தைப் போட்டு சிறிது தண்ணீர் விட்டு அடுப்பில் ஏற்றி, வெல்லம் கரைந்ததும், மண் - தூசு போக வடிகட்டிவிட்டு, பிறகு மீண்டும் அடுப்பில் ஏற்றி வெல்லத் தண்ணீர் நன்றாக நுரைத்துக்கொண்டு வரும்போது எடுத்து சர்க்கரைப் பொங்கலில் கொட்டி நன்றாகக் கிளறிவிடவும்.

    பிறகு தேங்காய் துருவல், பொடித்து வைத்துள்ள ஏலக்காய் சேர்த்துக் கிளறவும்.

    நெய்யில் முந்திரியை வறுத்து பொங்கலில் சேர்த்துக் நன்றாக கிளறி இற‌க்கவும். 

    இப்போது சுவையான கருப்பரிசி பொங்கல் தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×