search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சூப்பரான கிரிஸ்பி கார்ன் போண்டா
    X

    சூப்பரான கிரிஸ்பி கார்ன் போண்டா

    மாலை நேரத்தில் காபி, டீயுடன் சாப்பிட இந்த கிரிஸ்பி கார்ன் போண்டா அருமையாக இருக்கும். இன்று இதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வேக வைத்த ஸ்வீட் கார்ன் முத்துக்கள் - ஒரு கப்,
    உருளைக்கிழங்கு - ஒன்று
    குடைமிளகாய் - ஒன்று
    பச்சை பட்டாணி - அரை கப்
    வெங்காயம் - ஒன்று
    பச்சை மிளகாய் - 2
    பிரெட் ஸ்லைஸ்கள் - 2
    அரிசி மாவு - 2 டீஸ்பூன்,
    கடலை மாவு - ஒரு டீஸ்பூன்,
    இஞ்சி - பூண்டு விழுது - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    உருளைக்கிழங்கை வேக வைத்து மசித்து கொள்ளவும்.

    கொத்தமல்லி, குடைமிளகாய், வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பச்சை பட்டாணியை வேக வைத்து கொள்ளவும்.

    பிரெட் துண்டுகளை தண்ணீரில் முக்கி தண்ணீரை பிழிந்து விட்டு தனியாக வைக்கவும்.

    ஸ்வீட் கார்ன் முத்துக்களை வேக வைத்து ஆறியதும் மிக்சியில் தண்ணீர் விடாமல் அரைத்து எடுக்கவும்.

    அகலமான பாத்திரத்தில் அரைத்த விழுது, மசித்த உருளைக்கிழங்கு, குடைமிளகாய், பச்சை பட்டாணி, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, பிரெட் ஸ்லைஸ்கள், அரிசி மாவு, கடலை மாவு, இஞ்சி - பூண்டு விழுது, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்றாக பிசையவும்.

    கைகளில் எண்ணெய் தடவிக் கொண்டு பிசைந்த கலவையை சிறிய உருண்டைகளாக்கவும்.

    வாணலியில் எண்ணெய் காய சூடானதும் உருட்டிய கார்ன் போண்டாக்களைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.

    சூப்பரான ஸ்நாக்ஸ் கிரிஸ்பி கார்ன் போண்டா ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×