search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலை குளிர்ச்சிப்படுத்தும் சம்மர் சாலட்
    X

    உடலை குளிர்ச்சிப்படுத்தும் சம்மர் சாலட்

    இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உடலை குளிர்ச்சிப்படுத்தும். உடல் எடையை சீராக பராமரிக்க உதவும். கெட்ட கொழுப்பை குறைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்.
    தேவையான பொருட்கள் :

    சின்னவெங்காயம் - தேவைக்கு
    பீட்ரூட் - தேவைக்கு
    தக்காளி - தேவைக்கு
    முள்ளங்கி - தேவைக்கு
    முளை கட்டிய பச்சை பயறு - கால் கப்
    வெள்ளரிக்காய் - கால் கப்
    எலுமிச்சைபழம் - 1
    பச்சை மிளகாய் - 4
    நறுக்கிய கொத்தமல்லி தழை - கால் கப்
    இந்துப்பு - தேவையான அளவு
    மிளகு தூள் - அரை டீஸ்பூன்
    முட்டைகோஸ் - அரை கப்



    செய்முறை:

    வெங்காயம், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி போன்றவைகளை சிறிதாக நறுக்கி தலா கால் கப் அளவுக்கு எடுத்துக்கொள்ளவும்.

    கொத்தமல்லி, மிளகாய், முட்டை கோஸ் ஆகியவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

    நறுக்கிய காய்கறிகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் எலுமிச்சை பழத்தை சாறு பிழிந்து நன்றாக கலந்து கொள்ளவும்.

    அடுத்து அதனுடன் முளைகட்டிய பச்சை பயறு, கொத்தமல்லி தழை, இந்துப்பு, மிளகு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்.

    சூப்பரான சத்தான சாலட் ரெடி.

    இந்த சாலட்டை மதிய உணவுக்கு முன்பு ருசிக்கலாம்.

    ஆரோக்கிய பலன்:
    இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. உடலை குளிர்ச்சிப்படுத்தும். உடல் எடையை சீராக பராமரிக்க உதவும். கெட்ட கொழுப்பை குறைக்கும். ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும். அனைத்து வகையான புற்றுநோய்களையும் தடுக்கும் தன்மை கொண்டது. எலும்பு மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் நலம் சேர்க்கும்.

    -ஜஸ்வந்த் சிங், மூலிகை சமையல் கலைஞர், சென்னை.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×