search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    அருமையான கீரை பருப்பு கடைசல்
    X

    அருமையான கீரை பருப்பு கடைசல்

    சூடான சாதத்தில் சேர்த்து சாப்பிட கீரை பருப்பு கடைசல் அருமையாக இருக்கும். இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    துவரம் பருப்பு -  100 கி
    அரைக்கீரை - ஒரு கட்டு.
    வெங்காயம் - 1
    பூண்டு - 10 பல்
    தக்காளி - 1  
    பச்சைமிளகாய் - 2
    மஞ்சள் பொடி : 2 சிட்டிகை

    தாளிக்க

    கடுகு, கறிவேப்பிலை - தேவைக்கு
    சிறிது வடவம் - பெருங்காயம்
    எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.



    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அரைக்கீரையை ஆய்ந்து நன்றாக கழுவி, பின்பு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். நறுக்கியப்பின் கழுவக்கூடாது.

    துவரம்பருப்பை நன்றாக கழுவி அதனுடன் மஞ்சள் பொடி, பூண்டு சேர்த்து வேகவைக்கவும்.

    வேக வைத்த பருப்புடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய் சேர்த்து கொதிக்கவிடவும்.

    நன்கு கொதித்தவுடன், அதில் நறுக்கிய கீரையைப்போட்டு, கீரை வெந்தவுடன் (பச்சைநிறம் மாறிவிடாமல்) உப்புப்போட்டு கலக்கி இறக்கி, கீரைக்கடையும் சட்டியில் கொட்டி, நன்கு கடைந்து கொள்ளவும்.

    கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, வடவம், பெருங்காயம் போட்டு தாளித்து கீரையில் கொட்டவும்.

    சூப்பரான சத்தான கீரை பருப்பு கடைசல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×