search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு சத்தான பன்னீர் கிரில் சாண்ட்விச்
    X

    குழந்தைகளுக்கு சத்தான பன்னீர் கிரில் சாண்ட்விச்

    பிள்ளைகள் தேர்வின் போது உடலுக்கு உபாதை தராத அதே சமயம் சத்தான உணவை எடுத்து கொள்வது நல்லது. இன்று பன்னீர் கிரில் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை ரொட்டி (அ) நவதானிய ரொட்டி - 8,
    பன்னீர் துருவியது - 1 கப்,
    கேரட் துருவியது - 2 டேபிள்ஸ்பூன்,
    சீஸ் துருவியது - 2 டேபிள்ஸ்பூன்,
    ஸ்வீட்கார்ன் ( வேகவைத்தது) - 2 டேபிள்ஸ்பூன்,
    வெண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்,
    குடைமிளகாய் (மஞ்சள், சிவப்பு, பச்சை பொடியாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்,
    மிளகு பொடி - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    கொத்தமல்லி தழை (பொடியாக நறுக்கியது) - 1 கைப்பிடி அளவு,
    கிரீன் சட்னி - 2 டேபிள்ஸ்பூன்.

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் துருவிய பன்னீர், கேரட், சீஸ், வேகவைத்த ஸ்வீட கார்ன், நறுக்கிய கொத்தமல்லித் தழை, நறுக்கிய குடைமிளகாய், மிளகுத் தூள், உப்பு ஆகியவற்றை நன்றாக கலக்கி வைத்துக் கொள்ளவும்.

    இப்போது கோதுமை ரொட்டியில் முதலில் வெண்ணெய் தடவி, பின் அதன்மேல் புதினா சட்னியை தடவி, அதன்மேல் பன்னீர் கலவையை வைத்து, அதன்மேல் ஒரு ரொட்டித் துண்டை வைத்து மூட வேண்டும்.

    சூடாக்கிய கிரில்பேன் அல்லது தோசைக் கல்லில் ரொட்டியை வைத்து இரண்டு பக்கமும் சிவந்த பிறகு, இரண்டாக வெட்டி பரிமாறவும்.



    கிரீன் சட்னி செய்முறை

    என்னென்ன தேவை?


    புதினா - 1 கப்,
    மல்லித்தழை - 2 டீஸ்பூன்,
    தேங்காய் -1 டீஸ்பூன்,
    பச்சைமிளகாய் - 4,
    பூண்டு பல் - 4.
    இஞ்சி - ¼ துண்டு,
    எலுமிச்சைச்சாறு - 1 டீஸ்பூன்,
    உப்பு - தேவைக்கேற்ப,
    சீரகம் - 1 டீஸ்பூன்.

    எப்படிச் செய்வது?

    மேலே சொன்ன பொருட்கள் அனைத்தையும் சேர்த்து மிக்ஸியில் அரைத்தால் கிரீன் சட்னி தயார். இந்த சாண்ட்விச் வயிற்றுக்கு உபாதை ஏற்படுத்தாது. அதே சமயம் மிகவும் எளிதான உணவு.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×