search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கேரட் - கொள்ளு துவையல்
    X

    கேரட் - கொள்ளு துவையல்

    இட்லி, தோசை, சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட இந்த கேரட் கொள்ளு துவையல் சூப்பராக இருக்கும். இன்று இந்த துவையல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    வையான பொருட்கள் :

    கேரட் துருவல் - 1 கப்,
    வெங்காயம் - 1
    பூண்டு - 4 பல்,
    காய்ந்த மிளகாய் -10,  
    உ .பருப்பு - 1 கைப்பிடி,
    க. பருப்பு - 1 கைப்பிடி,
    கொள்ளு - 20 கிராம்,
    கடுகு, கறிவேப்பிலை, உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வெங்காயத்தை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், கேரட் துருவல், பூண்டை போட்டு வதக்கவும்.

    பின்பு மிளகாய்வற்றல், கொள்ளு, உ.பருப்பு, க.பருப்பு இவைகளை தனியாக வறுக்கவும்.

    அனைத்தும் சூடு ஆறியவுடன் கேரட் வதக்கிய கலவையை உப்பு, புளி தண்ணீர் சேர்த்து நைசாக மிக்சியில் அரைக்கவும்.

    பின்பு இத்துடன் வறுத்த பருப்புகள், மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, உ.பருப்பு தாளித்து துவையலில் சேர்த்து கலக்கவும்.

    சுவையான கேரட் - கொள்ளு துவையல் ரெடி.

    தோசை, இட்லி, சப்பாத்திக்கு சுவையான சைட்டிஷ் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×