search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான ஸ்நாக்ஸ் கொள்ளு சுண்டல்
    X

    சத்தான ஸ்நாக்ஸ் கொள்ளு சுண்டல்

    சர்க்கரை நோயாளிகள், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு கொள்ளு மிகவும் உகந்தது. இன்று கொள்ளுவில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கொள்ளு - 1 கப்
    வெங்காயம் - 1
    தேங்காய்த் துருவல் - 6 டீஸ்பூன்
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    கடுகு, சீரகம் - தாளிக்க
    காய்ந்த மிளகாய் - 5
    பெருங்காயத் தூள் - ஒரு சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கொள்ளுவை நன்றாக கழுவி 8 மணி ஊறவைத்த பின்னர் நன்றாக வேகவைத்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டுச் சூடானதும், கடுகு, சீரகம், பெருங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய வெங்காயம், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் வேக வைத்த கொள்ளுவை சேர்த்துக் கிளறுங்கள்.

    கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்து கலந்து இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான கொள்ளு சுண்டல் ரெடி.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×