search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலுக்கு வலுசேர்க்கும் நவதானிய தோசை
    X

    உடலுக்கு வலுசேர்க்கும் நவதானிய தோசை

    நவதானியங்களில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த நவதானியங்களை சேர்த்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :   

    புழுங்கல் அரிசி - 1 கப்
    பச்சரிசி - 1 கப்
    உளுந்து - 1/4 கப்
    கொள்ளு - 2 ஸ்பூன்
    கடலைப்பருப்பு - 1 ஸ்பூன்
    கொண்டைக்கடலை - 2 ஸ்பூன்
    துவரம்பருப்பு - 1 ஸ்பூன்
    பாசிப்பருப்பு  - 1 ஸ்பூன்
    பட்டாணி பருப்பு - 1 ஸ்பூன்
    காராமணி - 1 ஸ்பூன்
    வேர்க்கடலை - 1 ஸ்பூன்
    மொச்சை பயறு - 1 ஸ்பூன்
    பச்சை மிளகாய் - 3
    வெங்காயம் - 1
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு



    செய்முறை :


    வெங்காயம், ப.மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உளுந்து, அரிசியை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

    மொச்சை பயிறு, கொண்டைக்கடலை, கொள்ளு, காராமணி இவைகளை கழுவி இரவே ஊற வைக்கவும்.

    வேர்க்கடலையை தவிர மற்ற பருப்புகளை 2 மணி நேரம் ஊற வைக்கவும்.

    வேர்க்கடலையை சிவக்க வறுத்து ரவை போல பொடித்து கொள்ளவும்.

    ஊறவைத்த பருப்புகளை உப்பு சேர்த்து நைசாக தோசை மாவு பதத்திற்கு அரைத்து கொள்ளவும்.

    அரைத்த மாவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து 2 மணிநேரம் புளிக்க விடவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடனாதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    உடலுக்கு வலு சேர்க்கும் நவதானிய தோசை தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×