search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஜீரண சக்தியை தூண்டும் ஜீரா சாதம்
    X

    ஜீரண சக்தியை தூண்டும் ஜீரா சாதம்

    அஜீரண கோளாறு உள்ளவர்கள் சீரகத்தை உணவில் சேர்த்து கொள்ளலாம். இன்று ஜீரண சக்தியை தூண்டும் ஜீரா சாதம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்மதி அரிசி - 1 கப்
    வெங்காயம் - 2
    சீரகம் - 1 டேபிள் ஸ்பூன்
    கிராம்பு - 2
    அன்னாசிப்பூ - 1
    ப்ரிஞ்சி இலை - 1
    இலவங்கப்பட்டை - 1
    தண்ணீர் - 2 கப்
    கொத்தமல்லி - சிறிதளவு
    நெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    கொத்தமல்லி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாஸ்மதி அரிசியை நீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். பின் அதில் உள்ள நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளவும்.

    குக்கரை அடுப்பில் வைத்து அதில் நெயை ஊற்றி, கிராம்பு, அன்னாசிப்பூ, இலவங்கப்பட்டை, ப்ரிஞ்சி இலை சேர்த்து தாளித்த பின்னர் சீரகத்தை போட்டு வதக்கவும்.

    சீரகம் வெடித்ததும், அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கவும்.

    பிறகு அதில் கழுவி வைத்துள்ள அரிசி, கொத்தமல்லி சேர்த்து சிறிது நேரம் வறுக்கவும்.

    பின் அதில் 2 கப் தண்ணீர் விட்டு, உப்பை சேர்த்து, மூடி 2 விசில் விட்டு இறக்கவும்.

    இப்போது சுவையான ஜீரா சாதம் ரெடி!!!

    இதனை பன்னீர், காளான் கிரேவியுடன் பிசைந்து சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×