search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான வரகரிசி தயிர் மிளகு கஞ்சி
    X

    சத்தான வரகரிசி தயிர் மிளகு கஞ்சி

    சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி சிறுதானியங்களை உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று வரகரிசி தயிர் சேர்த்து கஞ்சி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகரிசி - ஒரு கப்,
    பாசிப்பருப்பு - 2 டேபிள்ஸ்பூன்,
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - ஒரு டேபிள்ஸ்பூன்,
    தயிர் - அரை கப்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வரகரிசி, பாசிப்பருப்பை நீர் விட்டு அலசி தேவையான தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் நன்கு வேகவிட்டு இறக்கி வைக்கவும்.

    இதனுடன் தயிர், மிளகுத்தூள் சேர்த்து, கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

    சத்துக்கள் மிக்க இந்தக் கஞ்சி எளிதில் ஜீரணமாகக் கூடியது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×