search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த ஓட்ஸ் பொங்கல்
    X

    சத்து நிறைந்த ஓட்ஸ் பொங்கல்

    சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்களுக்கு ஓட்ஸ் மிகவும் உகந்தது. இன்று ஓட்ஸை வைத்து பொங்கல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - 2 கப்
    பாசிப்பருப்பு - 1 கப்
    இஞ்சி - 1 துண்டு
    நெய் - 2 தேக்கரண்டி
    தண்ணீர் - தேவையான அளவு
    மிளகு - சிறிதளவு
    சீரகம் - சிறிதளவு
    பச்சை மிளகாய் - 2
    பெருங்காயத்தூள் - சிறிதளவு
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு
    முந்திரி பருப்பு - சிறிதளவு



    செய்முறை:

    இஞ்சி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் மிதமான சூட்டில் ஓட்ஸ், பாசிப் பருப்பு இரண்டையும் தனித்தனியாக வறுத்துக்கொள்ள வேண்டும்.

    அடுப்பில் குக்கரை வைத்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஓட்ஸ், பாசிப்பருப்பு, இஞ்சி, பெருங்காயத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து 4 விசில் போட்டு வேக வைக்க வேண்டும்.

    விசில் போனவுடன் குக்கரை திறந்து பொங்கல் கலவையை மசித்துவிட வேண்டும்.

    வாணலியில் நெய்யை ஊற்றி அது சூடானதும் முந்திரிப்பருப்பு, ப.மிளகாய், மிளகு, சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து பொங்கல் மேல் ஊற்றி கிளறிவிட வேண்டும்.

    சுவையான ஓட்ஸ் பொங்கல் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×