search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நீரிழிவு நோயாளிகளுக்கான வெள்ளைப்பூசணி - வெள்ளரி ஜூஸ்
    X

    நீரிழிவு நோயாளிகளுக்கான வெள்ளைப்பூசணி - வெள்ளரி ஜூஸ்

    வெயில் காலத்தில் நீரிழிவு நோயாளிகள் சோர்வடையாமல் இருக்க உடலுக்கு ஆரோக்கியம் தரும் ஜூஸ் வகைகளை எடுத்து கொள்வது நல்லது.
    தேவையான பொருட்கள் :

    வெள்ளைப்பூசணி - 200 கிராம்,
    வெள்ளரி - 200 கிராம்,
    எலுமிச்சைசாறு - 1 தேக்கரண்டி,
    இந்துப்பு - 2 சிட்டிகை,
    உப்பு  - தேவையான அளவு
    [பாட்டி மசாலா] மிளகுத்தூள் - தேவையான அளவு



    செய்முறை  :

    வெள்ளைப்பூசணி, வெள்ளரியை தோல் நீக்கி பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    1 துண்டு வெள்ளரியைத் துருவி, தனியே வைக்கவும்.

    மிக்சியில் நறுக்கிய வெள்ளைப்பூசணி, வெள்ளரி சேர்த்து அரைக்கவும்.

    அரைத்த ஜூஸில் எலுமிச்சை சாறு, இந்துப்பு, உப்பு, [பாட்டி மசாலா] மிளகுத்தூள், சேர்த்து நன்றாக கலக்கவும்.

    பெரிய டம்ளரில் ஊற்றி, மேலே துருவிய வெள்ளரியை போட்டு, ஒரு புதினா இலையை அலங்காரமாக வைத்து பரிமாறலாம்.

    வெயிலுக்கு குளுகுளு வெள்ளைப்பூசணி - வெள்ளரி ஜூஸ் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×