search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த பச்சைபயறு டோஸ்ட்
    X

    சத்து நிறைந்த பச்சைபயறு டோஸ்ட்

    பச்சைபயறில் அதிகளவு சத்துக்கள் நிறைந்ததுள்ளது. இன்று பச்சைபயறு, கோதுமை பிரட் வைத்து டோஸ்ட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை பிரட் - 10 துண்டுகள்,
    புதினா சட்னி - 1 கப்,
    தக்காளி சட்னி - 1 கப்,
    பச்சைபயறு பயிறு - 100 கிராம்,
    எண்ணெய் - 3 டீஸ்பூன்,
    அரிசி - 10 கிராம்,
    ப.மிளகாய் - 2,
    இஞ்சி - சிறுதுண்டு,
    வெங்காயம் - 1,
    உப்பு - தேவைக்கேற்ப



    செய்முறை :

    பச்சை பயறு மற்றும் அரிசியை நன்றாக கழுவி 2 மணிநேரம் ஊறவிடவும்.

    பின்னர் நீரை வடித்து விட்டு, பச்சை மிளகாய், இஞ்சி, வெங்காயத்துடன் சேர்த்து மிக்சியில் போட்டு நைசாக அரைத்து உப்பு சேர்த்து கலக்கவும்.

    பிரட் துண்டு மீது புதினா சட்னி, தக்காளி சட்னி தடவவும்.

    பின்னர் அதன் மீது பச்சை பயறு கலவையை சமமாக தடவவும்.

    நான்ஸ்டிக் தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் பிரட் துண்டுகளை வைத்து அதன் மேல் சிறிது எண்ணெய் சேர்த்து வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்.

    சூப்பரான சத்தான பச்சைபயறு டோஸ்ட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×