search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த முள்ளங்கி - பூசணி சப்பாத்தி
    X

    சத்து நிறைந்த முள்ளங்கி - பூசணி சப்பாத்தி

    பொதுவாக காய்கறிகளை இப்படி சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடும் போது வயிறு நிரம்பி இருப்பதுடன் உடல் எடையும் குறையும்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - 2 கப்,
    முள்ளங்கி துருவல் - கால் கப்,
    பூசணி துருவல் - அரை கப்,
    பச்சைமிளகாய் விழுது - ஒரு டீஸ்பூன்,
    கொத்தமல்லி விழுது - 2 டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
    இஞ்சி விழுது - அரை டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு,
    எண்ணெய் - 3 டீஸ்பூன்.



    செய்முறை:

    முள்ளங்கி துருவலை லேசாக பிழிந்து கொள்ளவும்.

    பூசணி துருவலை நன்றாக பிழிந்து கொள்ளவும்.

    கோதுமை மாவுடன் முள்ளங்கி துருவல், பூசணி துருவல், பச்சைமிளகாய் விழுது, கொத்தமல்லி விழுது, இஞ்சி விழுது, [பாட்டி மசாலா] சீரகத்தூள்,
    உப்பு சேர்த்து சப்பாத்திக்கு பிசைவது போல் பிசைந்து அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    இந்த மாவை சிறிது எடுத்து சிறிய சப்பாத்திகளாக இட்டு, சூடான தோசைக்கல்லில் போடவும்.

    மிதமான தீயில் வேக விட்டு எடுத்துப் பரிமாறவும்.

    சூப்பரான முள்ளங்கி - பூசணி சப்பாத்தி ரெடி.

    இதற்கு தால் அல்லது தயிர் பச்சடியைத் தொட்டுக் கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×