search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி
    X

    வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி

    காலையில் சர்க்கரை நோயாளிகள், டயட்டில் இருப்பவர்கள் சாப்பிட சத்தான வெஜிடபிள் சாண்ட்விச் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்:

    கோதுமை பிரெட் துண்டுகள் - 4,
    வெண்ணை சீஸ் ஸ்லைஸ் - 1,
    கேரட் துருவல் - 4 டீஸ்பூன்,
    முட்டைகோஸ் துருவல் - 4 டீஸ்பூன்,
    கிரீன் சட்னி - 3 டீஸ்பூன்
    உப்பு  - தேவையான அளவு,
    [பாட்டி மசாலா] மிளகுத்தூள்  - ஒரு டீஸ்பூன்.



    செய்முறை :

    கேரட் துருவலுடன் உப்பு, அரை டீஸ்பூன் [பாட்டி மசாலா] மிளகுத்தூள் சேர்த்து கலந்து கொள்ளவும்.

    கோதுமை பிரெட்டின் ஓரங்களை நீக்கிவிட்டு வெண்ணெய் தடவவும்.

    ஒரு பிரெட் ஸ்லைசின் மீது கிரீன் சட்னியை தடவவும்.

    அதன் மீது மற்றொரு பிரட் ஸ்லைஸ், சீஸ் ஸ்லைன்ஸ் வைத்து, முட்டைக்கோஸ் துருவலை பரத்தி அரை டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] மிளகுத்தூள்
    தூவவும்.

    இப்போது அதன் மீது மூன்றாவது பிரெட் ஸ்லைசை வைத்து மேலே கேரட் கலவையை பரத்தவும்.

    இறுதியாக நான்காவது பிரெட் ஸ்லைசால் மூடி, முக்கோண வடிவில் வெட்டி பரிமாறவும்.

    அருமையான வெஜிடபிள் சாண்ட்விச் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×