search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆரோக்கியம் தரும் முருங்கை கீரை சூப்
    X

    ஆரோக்கியம் தரும் முருங்கை கீரை சூப்

    தினமும் ஏதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்து கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இன்று முருங்கை கீரையில் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆய்ந்த முருங்கைக் கீரை - ஒரு கப்,
    வெங்காயம் - 1,
    தக்காளி - ஒன்று,
    பூண்டு - 5 பல்,
    இஞ்சி - சிறிதளவு,
    [பாட்டி மசாலா] மிளகுசீரகத்தூள் - ஒரு டீஸ்பூன்,
    நெய் - ஒரு டீஸ்பூன்,
    சோள மாவு - ஒரு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    இஞ்சியை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    பூண்டை தட்டிக்கொள்ளவும்.

    சோள மாவுடன் தண்ணீர் சேர்த்து கரைத்து கொள்ளவும்.

    வாணலியில் நெய் விட்டு தட்டிய பூண்டு, இஞ்சித் துருவல் சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

    அடுத்து அதில் கீரை சேர்த்து சுருள வதக்கவும்.

    பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    கீரை வெந்ததும் அதில் கரைத்து வைத்துள்ள சோள மாவு கரைசல் சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கவும்.

    கடைசியாக மேலே [பாட்டி மசாலா] மிளகு சீரகத்தூள் தூவி சூடாக பருகவும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×