search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான வேர்க்கடலை சாலட்
    X

    சத்தான சுவையான வேர்க்கடலை சாலட்

    தினமும் ஏதாவது ஒரு வகை சாலட்டை உணவில் சேர்த்து கொள்வது உடலுக்கு மிகவும் நல்லது. இன்று வேர்க்கடலை சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    தோல் நீக்கிய வேர்க்கடலை - அரை கப்,
    பச்சை மிளகாய் - 2,
    பெரிய வெங்காயம் - 1,
    தக்காளி - 1,
    கொத்தமல்லித் தழை - சிறிதளவு,
    [பாட்டி மசாலா] மிளகு தூள் - அரை டீஸ்பூன்,
    எலுமிச்சைச் சாறு - இரண்டு டீஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வேர்க்கடலையை வெறும் கடாயில் வறுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வறுத்த வேர்க்கடலையுடன், நறுக்கிய காய்கறிக் கலவை போட்டு நன்றாக கலந்து அதனுடன் எலுமிச்சைச் சாறு, [பாட்டி மசாலா] மிளகு தூள்,
    உப்பு சேர்த்துக் கலக்கவும்.

    கடைசியாக அதன் மேல் கொத்தமல்லித் தழையைத் தூவினால், வேர்க்கடலை சாலட் ரெடி.

    வறுத்த வேர்க்கடலை என்பதால், மொறுமொறுப்பாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×