search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த கேழ்வரகு சேமியா கிச்சடி
    X

    சத்து நிறைந்த கேழ்வரகு சேமியா கிச்சடி

    சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது கேழ்வரகு. இன்று கேழ்வரகு சேமியாவை வைத்து சத்தான கிச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சேமியா - 2 கப்
    பெரிய வெங்காயம் - 2
    கேரட் - 1
    பச்சை மிளகாய் - 4
    இஞ்சி - சிறிய துண்டு
    கொத்தமல்லித்தழை - ஒரு கொத்து
    கடுகு - 1/2 தேக்கரண்டி
    கடலைப்பருப்பு - 1/2 தேக்கரண்டி
    உளுந்து - 1/2 தேக்கரண்டி
    கறிவேப்பிலை - 1 கொத்து
    எண்ணெய் - 2 மேஜைக் கரண்டி
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயத்தை நீளமாகவும், பச்சை மிளகாய், இஞ்சி, கேரட் ஆகியவற்றை பொடியாகவும் நறுக்கிக் கொள்ளவும்.

    சேமியாவை கடாயில் போட்டு 1 ஸ்பூன் நெய் சேர்த்து வறுத்து கொள்ளவும்.

    அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய வைத்து கடுகு, உளுந்தம்பருப்பு, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின் வெங்காயம், இஞ்சி, ப.மிளகாயை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட், கறிவேப்பிலை, உப்பு ஆகியவை சேர்த்து நன்கு வதக்கவும்.

    அனைத்தும் நன்றாக வதங்கியதும், 3 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

    தண்ணீர் கொதிக்கும்போது சேமியாவைப் போட்டு லேசாக கிளறி விடவும்.

    அடுப்பை சற்று குறைந்த தீயில் எரியவிட்டு, சேமியா நன்கு வெந்ததும், கொத்தமல்லித்தழை, நெய் சேர்த்து ஒரு கிளறு கிளறி அடுப்பிலிருந்து இறக்கி பரிமாறவும்.

    கேழ்வரகு சேமியா கிச்சடி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×