search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல் எடையை குறைக்கும் பூண்டு - முருங்கைக்கீரை கஞ்சி
    X

    உடல் எடையை குறைக்கும் பூண்டு - முருங்கைக்கீரை கஞ்சி

    கீழ்வரும் செய்முறையின் அடிப்படையில் முருங்கைக்கீரை, பூண்டில் கஞ்சி செய்து தினமும் குடித்துவர, உடல் எடை மிக வேகமாகக் குறைய ஆரம்பிக்கும்.
    தேவையான பொருள்கள் :

    பூண்டு - 15 பல் 
    புழுங்கல் அரிசி - ஒரு கப் 
    சீரகம், மிளகு - தலா கால் டீஸ்பூன் 
    முருங்கைக்கீரை - ஒரு கைப்பிடி அளவு
    இந்துப்பு - தேவையான அளவு
    மோர் - ஒரு கப்
    தண்ணீர் - 4 கப்



    செய்முறை :

    பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

    புழுங்கல் அரிசியை வெறும் கடாயில் போட்டு வறுத்து ஆற வைத்து மிக்சியில் போட்டு ரவை போல் பொடித்து கொள்ளவும்.

    மிளகு, சீரகத்தை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    முருங்கைக்கீரையை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    உடைத்த புழுங்கல் அரிசி, பூண்டு, மிளகு, சீரகம், இந்துப்பு, முருங்கைக்கீரை, தண்ணீர் ஆகியவற்றை குக்கரில் சேர்த்து, மூடி 3 விசில்விட்டு இறக்கவும்.

    ஆறியதும் நன்கு மசித்து, மோர் சேர்த்து குடிக்கலாம். 

    அருமையான பூண்டு - முருங்கைக்கீரை கஞ்சி ரெடி.

    காலை, மாலை வேளைகளிலும் இதை சாப்பிடலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×