search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான சுவையான கேழ்வரகு - வரகரிசி இட்லி
    X

    சத்தான சுவையான கேழ்வரகு - வரகரிசி இட்லி

    கேழ்வரகு, வரகரிசியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று இந்த இரண்டையும் வைத்து சத்தான இட்லி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    வரகரிசி - 250 கிராம்
    கேழ்வரகு - 250 கிராம்
    உளுந்து - 150  கிராம்
    வெந்தயம் - 1/4 டேபிள் ஸ்பூன்



    செய்முறை :

    வரகரிசி, கேழ்வரகு ஆகியவற்றைத் தனியாகவும் உளுந்து, வெந்தயம் ஆகியவற்றை கழுவி தனியாக 3 முதல் 4 மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.

    ஊற வைத்தவற்றை தனித்தனியே அரைத்து ஒன்றாகக் கலந்து தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கி, நான்கு மணி நேரம் புளிக்க விடவும்.

    இட்லி தட்டில் மாவை ஊற்றி ஆவியில் 8 முதல் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுத்து பரிமாறவும். 

    அருமையான கேழ்வரகு - வரகரிசி இட்லி ரெடி. 

    இதற்கு தொட்டுக்கொள்ள புதினா துவையல், தக்காளி சட்னி அருமையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×