search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    பசலைக்கீரை - கேரட் தயிர் பச்சடி
    X

    பசலைக்கீரை - கேரட் தயிர் பச்சடி

    சூடான புலாவ், பிரியாணி, சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் பசலைக்கீரை தயிர் பச்சடி. இன்று இந்த பச்சடி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    பசலை கீரை - ஒரு கட்டு (சிறியது)
    கேரட் - 1
    தயிர் - 1 கப்
    வெங்காயம் - 1
    பச்சை மிளகாய் - 2
    [பாட்டி மசாலா] மிளகுத்தூள் - அரை தேக்கரண்டி
    உப்பு - தேவைக்கு



    செய்முறை :

    கீரையை சுத்தம் செய்து வைக்கவும்.

    கேரட்டை தோல் நீக்கி துருவிக்கொள்ளவும்.

    வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    அடிகனமாக பாத்திரத்தில் ஒரு லிட்டர் தண்ணீரை நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் நன்றாக கொதிக்க ஆரம்பித்தவுடன் அதில் பசலைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொதிக்கும் நீரில் போட்டு மூடி போட்டு மூடி விட்டு அடுப்பை அணைத்துவிடவும். கீரை சற்று வெந்து விடும்.

    பத்து நிமிடங்கள் கழித்து லேசாக ஆறியவுடன் கீரையை எடுத்து பொடியாக நறுக்கிக்கொள்ளுங்கள். 

    ஒரு பாத்திரத்தில் தயிரை ஊற்றி நன்றாக கடைந்து கொள்ளவும்.

    கடைந்த தயிரில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கேரட் துருவல், ப.மிளகாய், வேக வைத்த கீரை, உப்பு, [பாட்டி மசாலா] மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூடான புலாவ், பிரியாணி, சப்பாத்திக்கு ஏற்ற பச்சடி இது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×