search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஜீரண சக்தியை குணமாக்கும் சீரக சப்பாத்தி
    X

    ஜீரண சக்தியை குணமாக்கும் சீரக சப்பாத்தி

    அஜீரண பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் இந்த சீரக சப்பாத்தியை அடிக்கடி செய்வது சாப்பிடலாம். இன்று இந்த சப்பாத்தியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - அரை கப் 
    மைதா மாவு - அரை கப் 
    சீரகம் - 2 டீஸ்பூன் 
    ப.மிளகாய் - 2
    தயிர் - கால் கப் 
    எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன் 
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு. 



    செய்முறை : 

    ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மைதா மாவுடன், கோதுமை மாவு, சீரகம், உப்பு, தயிர், ப.மிளகாய், எலுமிச்சைச் சாறை விட்டு, தண்ணீர் தெளித்து சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து அரைமணிநேரம் அப்படியே வைக்கவும்.

    இந்த மாவை மெல்லிய சப்பாத்திகளாக தேய்த்து வைக்கவும். 

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும். 
    Next Story
    ×