search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்தான அரிசி - பயத்தம் பருப்பு கஞ்சி
    X

    சத்தான அரிசி - பயத்தம் பருப்பு கஞ்சி

    இந்த கஞ்சி வயதானவர்கள், குழந்தைகள் மற்றும் நோயாளிகளுக்கு தெம்பை தரும். எளிதில் ஜீரணமாகும். இந்த கஞ்சியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    அரிசி - 1/2 கப் 
    பயத்தம் பருப்பு - 1/4 கப் 
    தண்ணீர் - 2 1/2 கப்
    [பாட்டி மசாலா] மிளகுத்தூள் - தேவைக்கு
    சீரகம் - தேவைக்கு
    பூண்டு - 10  பல்



    செய்முறை :

    பூண்டை தோல் உரித்து வைக்கவும்.

    அரிசி, பயத்தம் பருப்பை நன்றாக கழுவி வைக்கவும்.

    கழுவிய அரிசியை கொரகொரப்பாக பொடித்து கொள்ளவும்.

    குக்கரில் கொரகொரப்பாக பொடித்த அரிசி, பயத்தம் பருப்பு, தண்ணீர், சீரகம், பூண்டு சேர்த்து 7 விசில் போட்டு வேக வைத்து இறக்கவும்.

    குக்கர் விசில் போனவுடன் மூடியை திறந்து கடைசியில் உப்பு, [பாட்டி மசாலா] மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலந்து அருந்தவும். 

    அருமையான அரிசி - பயத்தம் பருப்பு கஞ்சி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×