search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலுக்கு வலுசேர்க்கும் ஓட்ஸ் காய்கறி சூப்
    X

    உடலுக்கு வலுசேர்க்கும் ஓட்ஸ் காய்கறி சூப்

    வயதானவர்கள், டயட்டில் இருப்பவர்களுக்கு வலுசேர்க்கும் இந்த ஓட்ஸ் காய்கறி சூப். இன்று இந்த சூப்பை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஓட்ஸ் - ஒரு ௧ப்
    பச்சைப்பட்டாணி - 5 டீஸ்பூன்
    மக்காச்சோளம் - 3 டீஸ்பூன்
    கேரட் - 1
    பச்சை மிளகாய் - 1
    சின்ன வெங்காயம் - 10
    தக்காளி - 2
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - அரைத் டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] மிளகுத்தூள் - அரைத் டீஸ்பூன்
    [பாட்டி மசாலா] சீரகத் தூள் - அரைத் டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - ஒரு டீஸ்பூன்
    உப்புத்தூள் - தேவையான அளவு
    எண்ணெய் - ஒரு மேசைக்கரண்டி
    கறிவேப்பிலை - மூன்று கொத்து
    கொத்தமல்லி இலை - சிறிதளவு
    தண்ணீர் - 2 ௧ப்.



    செய்முறை :

    சின்ன வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லி, கேரட்டை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

    குக்கரில் நறுக்கிய காய்கறிகள், ஓட்ஸ், பச்சைப்பட்டாணி, மக்காச்சோளம், ப.மிளகாய், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் அனைத்தையும் போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி மூடிவைத்து 2 விசில் வரும் வரை வேகவிடவும். 

    குக்கர் விசில் போனவுடன் மூடியை திறந்து [பாட்டி மசாலா] சீரகத்தூள், [பாட்டி மசாலா] மிளகுத்தூள், உப்பு, கொத்தமல்லி இலை சேர்த்து மேலும் 5 நிமிடம் கொதிக்கவிடவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்து, கறிவேப்பிலை, சிறிது நறுக்கிய வெங்காயம் போட்டு தாளித்து கொதிக்கும் சூப்பில் கொட்டவும். 

    இறக்கும்போது எலுமிச்சை சாறு, ஊற்றிப் பரிமாறவும். 

    இது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×