search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சப்பாத்திக்கு அருமையான கேரட் மேத்தி பொரியல்
    X

    சப்பாத்திக்கு அருமையான கேரட் மேத்தி பொரியல்

    சூடாக சப்பாத்தி அல்லது சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும் கேரட் மேத்தி பொரியல். இன்று இந்த பொரியல் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கேரட் - 2, 
    வெங்காயம் - 1, 
    வெந்தயக்கீரை - 1 கைப்பிடி, 
    [பாட்டி மசாலா] மிளகாய்தூள் - 1/2 டீஸ்பூன், 
    [பாட்டி மசாலா] சீரகத்தூள் - 1/4 டீஸ்பூன், 
    உப்பு - தேவையான அளவு, 
    [பாட்டி மசாலா] மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன், 
    எண்ணெய் - 1 டீஸ்பூன், 
    கடுகு - சிறிதளவு.

    செய்முறை :

    கேரட், வெங்காயம், வெந்தயக்கீரையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். 

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடானதும், கடுகு போட்டு தாளித்த பின்னர் வெங்காயம் சேர்த்து வதக்கவும். 

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் பொடியாக நறுக்கிய கேரட் சேர்த்து 5 நிமிடங்கள் சிறிது தண்ணீர் தெளித்து வதக்கவும். 

    கேரட் நன்றாக பாதியளவு வெந்தவுடன் [பாட்டி மசாலா] மிளகாய் தூள், [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், [பாட்டி மசாலா] சீரகத் தூள் சேர்க்கவும். 

    அடுத்து அதில் உப்பு, வெந்தயக்கீரையை சேர்த்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் தண்ணீர் தெளித்து வதக்கவும் 

    அனைத்து நன்றாக வெந்ததும் அடுப்பை அணைத்து பரிமாறவும்.

    சூப்பரான கேரட் மேத்தி பொரியல் ரெடி.

    கேரட்டை துருவியும் செய்யலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×