search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முளைகட்டிய பச்சைப் பயறு சாதம்
    X

    முளைகட்டிய பச்சைப் பயறு சாதம்

    பள்ளி, கல்லூரி செல்லும் பிள்ளைகளுக்கு சத்தான வெரைட்டி சாதம் செய்து கொடுக்க விரும்பினால் முளைகட்டிய பச்சைப் பயறு சாதம் செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருட்கள் : 

    உதிரியாக வடித்த சாதம் - ஒரு கப், 
    முளைகட்டிய பச்சைப் பயறு - அரை கப், 
    வெங்காயத்தாள் -  ஒரு கட்டு, 
    வெங்காயம் - ஒன்று, 
    இஞ்சி  - சிறிய துண்டு, 
    பச்சை மிளகாய் - 4, 
    [பாட்டி மசாலா] மிளகுத்தூள் - அரை டீஸ்பூன், 
    குடைமிளகாய் - பாதி அளவு, 
    முட்டைகோஸ் - 50 கிராம், 
    எலுமிச்சம் பழம் - ஒரு மூடி, 
    கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை : 

    இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து அரைத்து கொள்ளவும். 

    வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லி, குடைமிளகாய், முட்டைகோஸ் ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். 

    கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் அரைத்த இஞ்சி, பச்சை மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும்.

    அடுத்து வெங்காயம், வெங்காயத்தாள், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும். 

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் முளைகட்டிய பச்சைப் பயறு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். 

    முளைகட்டிய பச்சைப் பயறு நன்றாக வெந்ததும் இதனுடன் உப்பு, [பாட்டி மசாலா] மிளகுத்தூள், வடித்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கி, எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி சேர்த்துக் கலந்து பரிமாறவும்.

    சூப்பரான முளைகட்டிய பச்சைப் பயறு சாதம் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×