search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த ப்ரோக்கோலி சப்பாத்தி
    X

    சத்து நிறைந்த ப்ரோக்கோலி சப்பாத்தி

    ப்ரோக்கோலியில் அதிகளவு சத்துக்கள் நிறைந்துள்ளது. இன்று ப்ரோக்கோலியை வைத்து சப்பாத்தி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ப்ரோக்கோலி - ஒரு கப்,
    கோதுமை மாவு - 2 கப்,
    [பாட்டி மசாலா] தனியாத்தூள் - அரை டீஸ்பூன்,
    [பாட்டி மசாலா] சீரகத்தூள் - அரை டீஸ்பூன்,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை :

    ப்ரோக்கோலியை கழுவி பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கடாயில் கால் டீஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய ப்ரோக்கோலியை போட்டு லேசாக வதக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் வதக்கிய ப்ரோக்கோலி, கோதுமை மாவு, [பாட்டி மசாலா] தனியாத்தூள், [பாட்டி மசாலா] சீரகத்தூள், உப்பு சேர்த்துப் பிசைந்து, அரை மணி நேரம் அப்படியே வைக்கவும்.

    அரைமணிநேரம் கழித்து மாவை சப்பாத்திகளாக திரட்டி வைக்கவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் திரட்டி வைத்த சப்பாத்தியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுக்கவும்.

    சத்து நிறைந்து ப்ரோக்கோலி சப்பாத்தி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×