search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    சத்து நிறைந்த ஸ்பைசி ஸ்வீட் கார்ன் சாலட்
    X

    சத்து நிறைந்த ஸ்பைசி ஸ்வீட் கார்ன் சாலட்

    குழந்தைகள் முதல் பெரியோர் வரை சாப்பிட சத்தானது இந்த ஸ்பைசி ஸ்வீட் கார்ன் சாலட். இன்று இந்த சாலட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஸ்வீட் கார்ன் - 2 கப்
    வெங்காயம் - 1
    தக்காளி - 1
    கொத்தமல்லி தழை - சிறிதளவு
    சாட் மசாலா - அரை டேபுள் ஸ்பூன்
    உப்பு - தேவையான அளவு
    மிளகாய் தூள் - கால் டேபுள் ஸ்பூன்
    லெமன் - பாதி.



    செய்முறை :

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    ஸ்வீட் கார்னை சிறிது உப்பு சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த கார்ன், பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம், உப்பு, மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.

    அடுத்து சாட் மசாலா, கொத்தமல்லி தழை, லெமன் சேர்த்து கலந்து பரிமாறவும்.

    சத்தான ஸ்பைசி ஸ்வீட் கார்ன் சாலட் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    Next Story
    ×