search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    முளைகட்டிய வெந்தயத்தின் பயன்கள்
    X

    முளைகட்டிய வெந்தயத்தின் பயன்கள்

    முளைகட்டிய வெந்தயத்தினை பல தலைமுறைகளாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். முளைகட்டிய வெந்தயத்தினை சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்களை பார்க்கலாம்.
    முளைகட்டிய வெந்தயத்தில் அதிகப்படியான விட்டமின்சி, புரோட்டீன், நியாசின், பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் ஆல்கலாய்ட்ஸ் நிறைந்திருக்கும். அதோடு ஈஸ்ட்ரோஜனாக கருதப்படும் டயோஸ்ஜெனினும் அதிகமாக காணப்படுகிறது.

    முளைகட்டிய வெந்தயத்தினை பல தலைமுறைகளாக நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். பாலூட்டும் தாய்மார்கள் சாப்பிடுவது அவர்களது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். அதே வேளையில் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடாது. சர்க்கரை நோய்க்கும் இது நல்லது. சருமம், கல்லீரல், சிறுநீரகங்களின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். செரிமானம் துரிதமாக நடைபெறவும் வழிவகை செய்யும். காய்ச்சலையும் குணப்படுத்தும்.

    சர்க்கரை நோயாளிகளுக்கு முளைகட்டிய வெந்தயம் மிகப்பெரிய வரப்பிரசாதமாக அமைந்திடும்.வெந்தயத்தில் இருக்கும் மூலக்கூறுகளால் உடலில் இன்ஸுலின் சுரப்பு அதிகரிக்கும் அதோடு ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

    குறிப்பாக டைப் 2 வகை சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனைச் சாப்பிடலாம். தொடர்ந்து 24 வாரங்கள் வரை முளைகட்டிய வெந்தயத்தை சாப்பிட்டு வர ரத்தச் சர்க்கரை அளவு குறைந்திடும். வெந்தயத்தில் இருக்கும் அமினோ அமிலம் இன்சுலின் சுரப்பை துரிதப்படுத்துகிறது.

    முளைகட்டிய வெந்தயத்தில் polysaccharide அதிகமாக இருக்கிறது. இவை நிறைவாக சாப்பிட்ட உணர்வைத் தருகிறது. இதனால் அதிகப்படியான உணவு சாப்பிடுவது தவிர்க்கப்படும். அதோடு முளைகட்டிய வெந்தயத்தில் 75 சதவீதம் கரையக்கூடிய நார்ச்சத்துக்கள் இருக்கின்றன.

    இவை நாளுக்கு தேவையான எனர்ஜியை கொடுத்திடும். உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இதனை தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைத்திடும்.

    முளைகட்டிய வெந்தயம் இதயத்திற்கு மிகவும் நல்லது. இதனை தினமும் சாப்பிட்டு வந்தால் இதயம் தொடர்பான பிரச்சனைகளை தவிர்த்திடலாம்.

    இதனை தொடர்ந்து சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் சேராமல் பார்த்துக் கொள்ளும். இதனால் இதயத்தின் செயல்பாட்டில் எவ்வித இடர்பாடுமின்றி தொடரும். அதோடு இதிலிருக்கும் பொட்டாசியம் நம் உடலில் இருக்கும் சோடியம் அளவை சீராக்கும். இதனால் ரத்த அழுத்தம் முறையாக பராமரிக்கப்படும்.

    ஆரம்ப காலங்களிலிருந்தே வெந்தயத்தை செரிமானம் தொடர்பான மருத்துவத்திற்கே அதிகம் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.

    முளைகட்டிய வெந்தயத்தில் அதன் பலன்கள் இரட்டிப்பாக கிடைக்கும். வயிறு பொருமல், அஜீரணம், வயிற்று வலி, வயிற்றுப் போக்கு போன்ற பிரச்சனைகள் இருப்பவர்களுக்கு உடனடித் தீர்வு கொடுக்கும்.

    இயற்கையாகவே வெந்தயம் உடலுக்கு சூடாகும். சிலர் சூடான உணவு வகைகளையே எடுத்துக் கொள்ள மாட்டார்கள் அவர்களுக்கு வெந்தயம் வரப்பிரசாதம் என்றே சொல்லலாம்.
    Next Story
    ×