search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆண்கள் சந்திக்கும் ஹார்மோன் பிரச்சனைகள்…
    X

    ஆண்கள் சந்திக்கும் ஹார்மோன் பிரச்சனைகள்…

    ஆண்களுக்கு அந்தந்த ஹார்மோன் உற்பத்தி குறைபாட்டிற்கு ஏற்ற சிகிச்சைகள் மூலம் சரிசெய்து கொள்ளலாமே தவிர, சர்வரோக நிவாரணியாக ஒரே மருந்தில் எல்லா பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்துவிட முடியாது.
    நம் உடலின் ஒவ்வொரு செல்லும் இன்னொரு செல்லுடன் ஹார்மோன் மூலம்தான் தொடர்பு கொள்கிறது. உச்சந்தலையிலிருந்து உள்ளங்கால் வரை இயங்கத் தேவையான ஹார்மோன்களை ஒவ்வொரு நொடியும் உற்பத்தி செய்யக்கூடிய பல நாளமில்லாச் சுரப்பிகள் உள்ளன.  தைராய்டு, அட்ரினல் மற்றும் பிட்யூட்ரி சுரப்பிகளில் உற்பத்தியாகி ரத்த ஓட்டம் அல்லது மற்ற உடல் திரவத்தின் வழியாக ஊடுருவி, உடலின் மற்ற உறுப்புகள் மற்றும் திசுக்களுக்கு சென்று அவற்றின் கட்டமைப்புகள் மற்றும் செயல்பாடுகளை மாற்றியமைக்கக் கூடிய சக்தி உடையவை இந்த ஹார்மோன்கள். அதாவது உடல் எப்போது? என்ன செய்ய வேண்டும்? என்ற சமிக்ஞைகளைத் தரும் சிக்னல்களாக வேலை செய்கின்றன.

    ஆண்களுக்கு வயதாகும்போது Testosterone ஹார்மோன் சுரப்பு குறையக்குறைய எலும்பு அடர்த்தியும் குறையும். இதனால் அடிக்கடி எலும்புமுறிவு ஏற்படும். இதுவரை சொன்னது எல்லாம் ஆண் ஹார்மோன்களினால் மட்டுமே, ஆண்களுக்கு வரக்கூடிய பிரச்சனைகள். இதுதவிர, ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாக வரக்கூடிய மற்ற ஹார்மோன்களால் தைராய்டு சுரப்பு குறைவு அல்லது அதிகம், பிட்யூட்ரி சுரப்பியில் குறைபாடு, அட்ரினல் சுரப்பியில் ஏற்படும் குறைபாடு போன்றவற்றால் வரக்கூடிய நோய்கள்.

    இயக்கமற்ற வாழ்க்கைமுறையினால் கொழுப்பு ஹார்மோன் அதிகமாவதால் வரக்கூடிய உடல்பருமன் நோய். இதைத் தொடர்ந்து Pancreas சரியாக வேலைசெய்யாததால் இன்சுலின் சுரப்பு குறைந்து நீரிழிவு நோய் வருவது இதெல்லாம் முக்கிய ஹார்மோன் பிரச்னைகள். உடல்பருமன், நீரிழிவு நோய் வந்துவிட்டாலே உடலுறவில் நாட்டம் இல்லாமல் போய்விடும்.

    பெரும்பாலும் ஆண் மலட்டுத்தன்மைக்கு உயிரணு எண்ணிக்கை குறைவு, விதையின் வளர்ச்சியின்மை மற்றும் விரைவில் விந்தணு வெளியேற்றம், Erectile Dysfunction ஆகியவை காரணங்களாகின்றன. சிலருக்கு மனம் மற்றும் உடல்ரீதியிலான பிரச்சனைகளால் உடலுறவு கொள்வதில் கடினம், உடலுறவில் நாட்டமின்மையால் ஆண் மலட்டுத்தன்மை உண்டாகிறது.

    ஆண்களின் 60, 70 வயதுகளில் ஹார்மோன் வளர்ச்சி பற்றாக்குறை மற்றும் தைராய்டு சுரப்பு ஹார்மோன் நிலை குறையலாம். இதனால் மூளையின் செயல்பாட்டுத் தன்மையை குறைக்கும் என சில ஆராய்ச்சிகள் சொல்கின்றன. அந்தந்த ஹார்மோன் உற்பத்தி குறைபாட்டிற்கு ஏற்ற சிகிச்சைகள் மூலம் சரிசெய்து கொள்ளலாமே தவிர, சர்வரோக நிவாரணியாக ஒரே மருந்தில் வயதாவதால் ஏற்படும் எல்லா பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்துவிட முடியாது. ஆன்டி ஏஜிங் ட்ரீட்மென்ட் செய்கிறார்கள் என்றாலும் ஆய்வுப்பூர்வமாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை. 
    Next Story
    ×