search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கண்புரை நோயும் அதற்கான தீர்வு முறைகளும்
    X

    கண்புரை நோயும் அதற்கான தீர்வு முறைகளும்

    முன்னர் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வந்த இந்தக் கண்புரை நோய், தற்காலத்தில் வயது வித்தியாசமின்றி பிறந்த குழந்தைகளுக்குக்கூட கண்புரை ஏற்படுகிறது.
    கண்புரை (Cataract) என்றால் என்ன?

    மனிதர்களாய் பிறந்த ஒவ்வொருவருக்கும் கண்களால் காண வேண்டும் என்றால் கருவிழிக்குப் பின்னால் உள்ள லென்ஸ் மூலம் தான் பார்க்க முடியும். அந்த லென்சில் ஒரு வெண்மையான தோல் படலம் பரவி பார்வையை மறைத்து நாளடைவில் ஒரு வெண்படலமாக மாறிவிடுகிறது. இதுதான் கண்புரை எனப்படுகிறது. இதை கிராமங்களில் கண்ணில் பூ விழுந்து விட்டது என்று கூறுகிறார்கள்.

    முன்னர் 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வந்த இந்தக் கண்புரை நோய், தற்காலத்தில் வயது வித்தியாசமின்றி பிறந்த குழந்தைகளுக்குக்கூட கண்புரை ஏற்படுகிறது. குழந்தைப் பருவத்தில் டிவி பார்ப்பது, செல்போன் வீடியோகேம் பார்ப்பது போன்ற காரணங்களாலும், தற்கால உணவு பழக்கங்களாலும் கண்புரை நோய் குழந்தைகளையும் தாக்க தொடங்கி விட்டன.

    சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு உள்ளவர்களுக்கு கண்புரை நோய் எளிதில் ஏற்பட்டு விடுகிறது. கேட்ராக்ட் வந்து விட்டது என்றவுடன் கண்ணாடி அணிந்தால் போதும், சொட்டு மருந்து விட்டால் போதும் என்று நினைத்தால் அது தவறான எண்ணம். அறுவை சிகிச்சை மூலம் மட்டுமே கண்புரையை அகற்ற முடியும். அறுவை சிகிச்சைதான் நிரந்தரத் தீர்வாகும்.

    கண்களில் அறுவைச் சிகிச்சை என அச்சம் தேவையில்லை. ஊசி இல்லை, தையலில்லை, வலியில்லை. நவீன மருத்துவ முறையில் PHACO EMULSIFICATION முறைப்படி மிக எளிதாக 5 நிமிடத்தில் கண்புரை அகற்றப்பட்டு அன்றே வீட்டுக்குத் திரும்பலாம். “PHACO” முறையில் பாதிக்கப்பட்ட கண் உள்விழி லென்சை அகற்றிவிட்டு செயற்கையாக உள்விழி லென்ஸ் பொருத்தப்படுகிறது. இவையனைத்தும் 5 நிமிடத்தில் செய்யப்பட்டு இழந்த பார்வையை மீட்டுத்தருகிறது. வெளிநாடுகளிலும், உள்நாடுகளிலும் தயாரிக்கப்பட்ட தரமான நவீன லென்ஸ்கள் கிட்டப்பார்வை, தூரப்பார்வைக்கேற்றப்படி உள்விழி லென்ஸ் பொருத்தப்படுகிறது.

    கண்புரை ஏற்பட்டவுடன் உரிய கண் மருத்துவரை அணுக வேண்டும். அவரின் ஆலோசனைப்படி கண்புரை தொடக்க நிலையில் இருந்தால் ‘பேக்கோ’ முறையில் கண்புரையை அகற்றிவிடலாம். கண்புரையை வளரவிடுவது நல்லதல்ல. கண்புரை அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் மறுநாளே அனைத்து வேலைகளையும் செய்யலாம். கண்களை மறைக்கும் பச்சைக்கலர் துணி தேவையில்லை. கறுப்புக்கண்ணாடி மட்டும் 5 நாட்கள் அணிந்தால் போதும். சொட்டு மருந்து 30 நாட்களுக்கு கண்களில் ஊற்றிக்கொள்ள வேண்டும்.

    காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் கட்டணமில்லா அறுவை சிகிச்சை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம்.

    Dr. K. கமல்பாபு MB-BS, DO,
    கண் அறுவை சிகிச்சை நிபுணர்,
    வாஸன் கண் மருத்துவமனை,
    அண்ணாநகர், மதுரை-20.
    Next Story
    ×