search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடலுக்கு ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டியவை
    X

    உடலுக்கு ஆரோக்கியத்திற்கு செய்ய வேண்டியவை

    உடல் ஆரோக்கியத்திற்கு சில விஷயங்களை தவிர்க்க வேண்டியது அவசியமாகும். எந்த விஷயங்களை தவிர்க்கவும், சேர்க்கவும் வேண்டும் என்பதை அறிந்து கொள்ளலாம்.
    • சர்க்கரை உண்பதினை நிறுத்துங்கள். சர்க்கரை, வெள்ளை சர்க்கரை விஷம்தான். இன்று புற்று நோய்க்கு கூட ஒரு முக்கிய காரணமாக வெள்ளை சர்க்கரையை குறிப்பிடுகின்றனர். சர்க்கரை சுவை ஒருவரை அடிமைப்படுத்தி விடும். சர்க்கரை உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியினை குறைத்து விடும். உடலிலுள்ள தாது உப்புகளை அழிக்கும். அதிக சர்க்கரை சாப்பிட வேண்டும் என்ற ஆசையினைத் தூண்டும். அதிக பசியினைத் தூண்டும். எனவே அனைவருமே வெள்ளை சர்க்கரையினை தவிர்த்து விடுங்கள்.

    • உண்ணா விரதம்:- சாப்பிடும் பொழுது உடலில் உள்ள செல்கள் பெருகி, வளர்ந்து வரும். உண்ணாவிரதம் இருக்கும் பொழுது குறிப்பாக 10 மணி நேரங்கள் சென்று செல்கள் உடலை பராமரிக்க ரிப்பேர் செய்யவும் செய்கின்றது. நோய் தீருதல், புண்கள் ஆறுதல் இவை நிகழ்கின்றன. இது குறிப்பிட்ட நேரங்கள் வரை நிகழும். எனவே உண்ணாவிரதம் என்பது மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இருக்கலாம். தண்ணீர் மட்டும் குடிக்கலாம். இல்லையெனில் அவ்வப்போது சில மணி நேரங்கள் உண்ணாது இருக்கலாம். ஒருவேளை மட்டும், காய்கறிகளோ, பழங்களோ மட்டும் எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அவ்வப்போது நீர் குடியுங்கள் என அறிவுறுத்தப்படுகின்றது.

    • உடற்பயிற்சி: தினமும் அரை மணி நேரம் நடங்கள். கை, கால்களுக்கு பலம் சேர்க்கும் பயிற்சிகளை வாரம் 2 முறையாவது செய்யுங்கள். ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை நாற்காலியில் இருந்து எழுந்து நடங்கள்.

    • பயிர் விளையும் நிலத்தில் மண் வளம் குறைந்து இருக்கும் வாய்ப்புகள் அதிகம். அதுபோல் நமது உடலில் வலிமையேற்ற மருத்துவம் மூலம் தேவையான சத்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

    கண்டிப்பாக தியானம் செய்ய கற்றுக் கொள்ளுங்கள். இது ஆரோக்கியம் சம்பந்தப்பட்டது.
    Next Story
    ×