search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மூளையின் செயல்திறனை பாதிப்பவை
    X

    மூளையின் செயல்திறனை பாதிப்பவை

    மூளையே உடலின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பு எனலாம். மூளையின் செயல்திறனை பாதிப்பது என்னென்ன என்பதனை அறிந்து அதனை தவிர்த்து விடுவோம்.
    மனித மூளையின் எடை சுமாராக 1,300-1,400 கி அளவு இருக்கும். மனித உடலின் எடையில் சுமார் 2 சதவீதம் அளவு மூளை எனலாம். இந்த மூளையே உடலின் அனைத்து செயல்களுக்கும் பொறுப்பு எனலாம். மூச்சு விடுதல், ஹார்மோன் இயக்கம், சதைகளின் இயக்க கட்டுப்பாடு, இருதய துடிப்பு, சிந்தனை, உணர்ச்சி என இவை அனைத்தும் இதில் அடங்கும். ஆகவே மூளைக்கு அதிக சக்தி தேவைப்படும்.

    உங்களது அன்றாட கலோரி சக்தியில் 20 சதவீதம் மூளைக்கே தேவையாகின்றது. இது வயது, ஆண்பால், பெண்பால், மூளையின் சக்தியினை உபயோகிக்கும் அளவு இவற்றினை பொறுத்து சற்று மாறுபடும். ஆக இந்த மூளையின் பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பது எப்படி என்பதனை அறிய வேண்டும். மூளையின் செயல்திறனை பாதிப்பது என்னென்ன என்பதனை அறிந்து அதனை தவிர்த்து விடுவோம்.

    * மெத்தனமாக போர் அடித்துக்கொண்டு உட்கார்ந்து இருப்பவர்களுக்கு மூளை செயல்திறன் வெகுவாய் குறைந்து விடும். உடற்பயிற்சி எவ்வளவு அவசியமோ அதுபோல் மூளைக்கு வேலை, பயிற்சி அவசியம். இது இல்லையெனில் மூளை சுருங்கி விடும்.

    * காலை உணவினை துரத்தி, திட்டி கொடுப்பவர்கள் பெண்கள்தான். காலை உணவினை யாரும் உண்ணாமல் வீட்டில் உள்ளவர்களை வெளியில் செல்ல, வீட்டில் உள்ள பெண்கள் விடவே மாட்டார்கள். இது இவர்கள் செய்யும் மாபெரும் உதவி. அவசரம் என்ற பெயரில் ஓடும் நபர்கள் அவர்களது மூளைக்கு தேவையான சக்தி அளிக்காமல் விட்டு விடுவதால் உங்கள் அனைத்து செயல்திறன்களும் குறைந்து விடும். இதனைத் தொடர்ந்து செய்தால் அதிக பாதிப்புகள் ஏற்படும்.

    ஜப்பான் நாட்டில் மேற்கொண்ட ஆய்வில் காலை உணவினை தவிர்ப்பவர்களுக்கு 26 சதவீதம் கூடுதலாக மூளையில் ரத்தக்குழாய் வெடிக்கும் பாதிப்பு ஏற்படுகின்றது என்று கூறப்படுகின்றது. மேலும் காலை உணவினை தவறாது எடுத்துக் கொள்பவர்களுக்கு மூளை நன்கு இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் காலை உணவினை முறையாக எடுத்துக் கொண்டால் நொறுக்கு தீனி உண்ணும் பழக்கம் வெகுவாய் குறையும்.

    * கதிர்வீச்சு கொண்ட செல்போன்களை காதை விட்டு அகற்றும் வழக்கமே குறைந்து விட்டது. காதோடு வைத்துக் கொள்ளும் வகையில் இன்றைய இளைய சமுதாயம் உள்ளது. தூங்கும் பொழுதும் அருகிலேயே வைத்து தூங்குகின்றனர். இந்த கதிர்வீச்சினால் தலைவலி, குழப்பம் போன்றவை ஏற்படுகின்றன என ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு சமீபத்திய ஆய்வு புற்றுநோய், மூளை கட்டி போன்ற தாக்குதல்கள் ஏற்படுவதாக உறுதி செய்துள்ளன. உடல்நலம் சரியில்லாத பொழுது உலகமே தன் தலையில்தான் என்பதுபோல் அந்த நேரத்திலும் வேலை செய்யாதீர்கள். சளியாக இருந்தால் கூட சற்று ஓய்வு அவசியம். ஓய்வும், சிகிச்சையும் நோய்க்கு அவசியம் என்பதனை உணர்க.

    * தேவைக்கு அதிகமாக உண்ணாதீர்கள். மேலும் சத்தான உணவினை மட்டுமே உண்ணுங்கள். உடலுக்குத் தேவையான சத்து கிடைக்காதபொழுது உடல் சோர்வும், மூளையில் மறதி, சோர்வும் ஏற்படும். பேச்சுக்கு ஒரு தேவை உண்டு. தனிமையில் வாழ்பவர்களும் அதிகம் பேசாது இருப்பவர்களும் மனச்சோர்வு, படபடப்பு இவற்றுக்கு ஆளாவார்கள். எனவே தேவையானவற்றுக்கு பேசுங்கள்.

    * தூக்கமின்மை அதிக ஞாபகமறதியினை ஏற்படுத்தி விடும்.
    * புகை பிடித்தல் நரம்புகளை பாதிக்கும் தன்மை கொண்டது.
    * அதிக சர்க்கரை உட்கொள்வது மறதி நோயினை ஏற்படுத்தும்.
    * காற்றில் மிக அதிக மாசு இருந்தால் மூளை சுருங்கும்.

    ஆக தவிர்க்க வேண்டியவைகளுக்கு சற்று கவனம் கொடுத்து தவிர்த்தால் நமது மூளை நன்கு செயல்படும்.
    Next Story
    ×