search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க உதவும் ஸ்மார்ட் லெதர் பெல்ட்
    X

    உடல் ஆரோக்கியத்தை கண்காணிக்க உதவும் ஸ்மார்ட் லெதர் பெல்ட்

    நமது உடலமைப்பு மற்றும் நமது வாழ்க்கை முறை போன்றவற்றை கொண்டு நமது அன்றாட திட்ட வடிவமைப்பை தந்து ஆரோக்கியமாக வாழ வழிவகையை ஏற்படுத்தி தருவதிலும் ஸ்மார்ட் பெல்ட் சிறப்புடன் செயல்படுகிறது.
    பெல்ட் என்பது இடுப்பில் அணியக்கூடிய இறுக்கி பிடிக்க கூடிய பட்டை அமைப்பு. முந்தைய காலம் தொட்டு பெல்ட் பயன்பாடு இருந்து வந்துள்ளது. குறிப்பாக தோலால் ஆன பெல்ட் என்பது கி.மு. 3000 முதல் கி.மு. 1000 வரையிலேயே பயன்பாட்டில் இருந்து வந்துள்ளது. போர் படை வீரர்கள் தங்கள் ஆயுதங்களை இடுப்பில் இணைத்து கொள்ள ஏதுவாக தோலால் ஆன பட்டையை சில சொருகும் இடைவெளி விட்டு உருவாக்கினர். அதுதான் நாளடைவில் பலவித மாற்றங்களை பெற்று விதவிதமான பெல்ட்களாக உருமாறி வந்துள்ளது. தோலால் இந்த பட்டையை பதப்படுத்த அம்மோனியா நிறைந்த விலங்குகளின் மூத்திரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதுபோலவே இன்றைய நாளில் தோல் பெல்ட்கள் என்பதன் உருவாக்கம் பலவிதமான பதப்படுத்தும் முறையில் மெருகேற்றப்டு அழகிய பெல்ட்களாக உலா வருகின்றன.

    நம்மூரில் தோல் பட்டை மற்றும் கயிறுகள் தான் இடுப்பில் கட்டப் பயன்படுத்தப்பட்டு வந்தன. மேலை நாடுகளில் மேம்பட்ட பெல்ட் உருவாகி பின் அனைத்து நாடுகளிலும் பெல்ட் பயன்பாடு அதிகரித்து கொண்டே வந்துள்ளன. பெல்ட்கள் என்பது தோல், கேன்வாஸ், ரப்பர் மற்றும் சில துணி வகைகள் என்பது ரெக்ஸின் என்ற தோல் போன்ற வழவழப்பான பொருட்கள் கொண்டு அழகுடன் உருவாகின்றன. ஆண், பெண் என இரு பாலரும் அணிய ஏற்ற வகையில் பெல்ட் உருவாக்கம் அமைந்துள்ளதால் இதன் உருவ அமைப்பு மற்றும் அளவீடுகள் சற்று மாறுபட்ட வகையில் பாலின வகை பிரிவுகளில் கிடைக்கின்றன. பெல்ட் அணிவதன் மூலம் ஆண்களின் ஆடை அலங்காரம் பூர்த்திஅடைகின்றன.

    வந்து விட்டது ஸ்மார்ட் பெல்ட்

    அட பெல்ட்-யில் என்ன ஸ்மார்ட் என கேட்காதீர். எல்லா பயன்பாட்டிலும் ஸ்மார்ட் வந்து விட்டது எனும் போது இடுப்பிற்கு அணியும் பெல்ட் மட்டும் ஸ்மார்ட் ஆக மாறக்கூடாதா. அந்த வகையில் முற்றிலும் ஸ்மார்ட் வசதிகள் மற்றும் செயல்பாடுகள் கொண்ட பெல்ட் வந்துள்ளது. ஸ்மார்ட் வசதிகளாக இடுப்பின் அளவை அளவிடுவது, நமது உடல் செயல்களை கண்காணிப்பது, நாம் உண்ணும் உணவு பழக்கத்தை பதிவு செய்வது என்றவாறு நமது இடுப்பின் அளவு அதிகரிக்காத வண்ணம் எடை குறைப்பு சிந்தனையை மேம்படுத்தும் வகையில் இந்த பெல்ட் செயல்பாடு உள்ளது.

    ஸ்மார்ட் பெல்ட் செயல்படும் விதம்

    ஸ்மார்ட் பெல்ட் என்பதில் அதன் பக்குள்ஸ் அமைப்பில் பொருத்தப்பட்டுள்ள சிறு சென்சார் கருவியின் மூலம் இயக்கப்படுகிறது. இது சுலபமான டிராக்கிங் வசதி மூலம் அதாவது பயல்லெஸ் டேட்டா சின்ஸிங் முறையில் மொபைல் போனில் உள்ள ஆப்வுடன் இணைக்கப்பட்டு தகவல்களை உடனுக்குடன் நமது மொபைல் போனுக்கு தந்து விடுகிறது. இதனை இயக்கிட எந்தவிதமான பட்டனையும் அழுத்த வேண்டாம். பெல்ட் அணிந்தவுடன் இதன் சென்சார் இயங்கி தானாகவே டிராக் பணியை தொடங்கிவிடும். பக்குள் மற்றும் ஸ்ட்ராப் பகுதியில் யாரும் அறிந்திராத வகையில் இடம் பெற்றுள்ள சிறு அமைப்பில் மைக்ரோ யுஎஸ்பீ போர்ட் மூலம் சார்ஜ் ஏற்றக்கூடிய பேட்டரி கூட உள்ளது. ஒரு முறை இந்த பேட்டர் சார்ஜ் செய்தால் போதும் அது முப்பது நாட்கள் வரை இயங்கிட வைக்கும். இந்த அமைப்பில் ஒரு சிறு சென்சார் டிராக் அமைப்பு மற்றும் பேட்டரி மட்டுமே உள்ளது.

    அனைத்து நிலை ஆரோக்கிய தோழன்

    ஸ்மார்ட் பெல்ட் என்பதை அணிந்தவுடன் அது நமது இடுப்பின் அளவு எவ்வளவு உள்ளது என்பதையும், அதன் அகல விரிவு மாற்றங்களையும் அவ்வப்போது தெரிவிக்கும்.

    நமது வாழ்க்கை முறை எப்படி உள்ளது என்பதை அதில் உள்ள இயக்கநிலை சென்சார் அறிந்து தெரிவிக்கும். அதாவது தினசரி நமது உடலில் எவ்வளவு கலோரி எரிக்கப்படுகிறது, எவ்வளவு தூரம் நடந்து வந்தோம், எவ்வளவு நேரம் அமர்ந்து இருந்தோம் என்பதை தகவலாய் மொபைலுக்கு அனுப்பி வைக்கும்.

    எவ்வளவு கலோரி உணவை நாம் உட்கொள்கிறோம் என்பதை அரை மணி நேரத்திற்கு ஒரு முறை கணக்கிட்டு கூறிவிடும். அப்படியெனில் சாப்பிடும்போது ஏற்படும் வயிறு விரிவு அளவை வைத்தே கூர்மையான அளவீடுகளில் கலோரிகளை குறிப்பெடுத்து கூறிவிடும். இதன் மூலம் நாம் அதிகமாக உணவை உண்பதை தடுக்க முடிவதுடன், அன்றாட நம் பணிக்கான கலோரி மற்றும் உட்கொள்ள வேண்டிய உணவு கலோரி போன்றவை சுலபமாக அறிந்திட முடியும்.

    நமது உடலமைப்பு மற்றும் நமது வாழ்க்கை முறை போன்றவற்றை கொண்டு நமது அன்றாட திட்ட வடிவமைப்பை தந்து ஆரோக்கியமாக வாழ வழிவகையை ஏற்படுத்தி தருவதிலும் ஸ்மார்ட் பெல்ட் சிறப்புடன் செயல்படுகிறது.

    நாம் அணிகின்ற பெல்ட் என்பது அவ்வப்போது ஏற்படும் இடுப்பு அளவு அமைப்பிற்கு ஏற்ப மாறுபட்டும், ஒவ்வொரு ஆடைக்கும் ஏற்ற வகையில் அணிவதற்கும், இறுக பிடித்திருப்பதில் இருந்து சற்று தளர்வாக வேண்டும்போது மாற்றி அமைத்து கொள்ளவும் தனிப்பட்ட வழிமுறைகளுடன் ஸ்மார்ட் பெல்ட்-யை மாற்றிட முடியும். 
    Next Story
    ×