search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    மருத்துவ மகத்துவம்: நோய்களை குணப்படுத்தும் காந்தங்கள்
    X

    மருத்துவ மகத்துவம்: நோய்களை குணப்படுத்தும் காந்தங்கள்

    இயற்கை மருத்துவத்தில் காந்தத்தை பயன்படுத்தும் போது அது உடலில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த மாற்றத்தால் மிகுந்த பலன் கிடைக்கிறது.









    காந்த சிகிச்சையின் போது.. சிகிச்சைக்கு பயன்படுத்தும் காந்த வடிவங்கள்..







    நாம் வாழும் இந்த பூமி காந்த சக்தி கொண்டது. பூமி, ஒரு மிகப்பெரிய காந்தம் போன்றது. பூமியைப்போன்றே மனிதனுக்குள்ளேயும் காந்த சக்தி உள்ளது. இயற்கை மருத்துவத்தில் காந்தத்தை பயன்படுத்தும் போது அது உடலில் பல மாற்றங்களை கொண்டு வருகிறது. அந்த மாற்றத்தால் மிகுந்த பலன் கிடைக்கிறது.

    காந்தத்தில் வட புலம், தென்புலம் என 2 புலங்கள் இருப்பது நாம் அறிந்தது தான். அந்த இருதுருவ புலங்களை வைத்து இயற்கை மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.

    பொதுவாக காந்த புலங்கள் ஒன்றை ஒன்று ஈர்க்காது. எடுத்துக்காட்டாக, ஒரு காந்தத்தின் தென் துருவமும், மற்றொரு காந்தத்தின் தென் துருவமும் ஈர்க்காது. விலகிச்செல்லும். அதேபோல் தான் வட துருவமும் செயல்படும். ஆனால் ஒரு காந்தத்தின் தென் துருவமும், மற்றொரு காந்தத்தின் வடதுருவமும் ஒன்றை ஒன்று ஈர்க்கும். அத்தகைய வட, தென் என தனித்தனியே இருக்கும் இருகாந்த துருவ புலங்களுக்கென்று தனித்தனி தன்மைகள் உண்டு.

    வடதுருவ காந்த புலன், உடலின் வெப்பத்தை அதிகரிக்கவும், நோய் தொற்றை குறைக்கவும் உதவுகிறது. உடலில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்க செய்கிறது. தென்துருவ காந்த புலத்தின் சக்தி உடலில் குளிர்ச்சியை உண்டாக்கும். அதுவும் உடலின் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் சக்தி கொண்டது. உடலின் வீக்கம், கட்டி போன்றவற்றை குணமாக்க வடதுருவ காந்த புலத்தின் சக்தியை பயன்படுத்தலாம். அதேபோல், தென்துருவ காந்த புலத்தின் சக்தியை கொண்டு காயம், நாள்பட்ட புண்களை ஆற்றலாம்.

    ஒரு கண்ணாடி பாட்டிலில், தண்ணீரை ஊற்றி அதை காந்தத்தின் வடதுருவத்தின் மீது 8 மணி நேரம் வைத்திருந்தால் அந்த பாட்டிலில் உள்ள தண்ணீர் மருத்துவ குணம் பெற்று விடும். காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் அந்த மருத்துவ குணம் நிறைந்த தண்ணீரை குடித்து விட்டு காந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் கூடுதல் பலன் கிடைக்கும். காந்தத்தின் தென் துருவத்தின் மீதும் மேற்கூறியதுபோல் செய்து பலன் பெறலாம்.

    இதுதவிர மற்றொரு முறையும் உள்ளது. காந்தத்தின் வடதுருவத்தின் மீது எண்ணெய் நிரப்பிய பாட்டிலை வைக்க வேண்டும். அந்த பாட்டிலின் மீது காந்தத்தின் தென் துருவத்தை வைக்க வேண்டும். அவ்வாறு 8 மணி நேரம் வைத்திருந்தால் அந்த பாட்டிலில் உள்ள எண்ணெய் மருத்துவ குணம் பெற்றுவிடும். அவ்வாறு கிடைக்கப்பெற்ற மருத்துவ எண்ணெய்யை கட்டி, வீக்கங்களில் தடவினால் பலன் கிடைக்கும்.

    காந்த சக்தியை காஷ் (விசை) என்ற அளவீட்டில் நிர்ணயிக்கிறார்கள். 50, 100, 200, 500 காஷ் பவரில் இருந்து சுமார் 2 ஆயிரம் காஷ் பவர் வரை உள்ள காந்தங்கள் கிடைக்கிறது. மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு ஏதுவான வடிவங்களில் காந்தங்கள் வடிவமைக்கப்படுகின்றன. அதனை வாங்கி டாக்டரின் ஆலோசனைப்படி மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம்.

    தற்போது காந்த சிகிச்சை அளிக்க காந்த பெல்ட், காந்த படுக்கை என பல்வேறு நவீன கருவிகள் வந்து விட்டன. அவ்வாறு சிகிச்சை அளிக்க உதவும் காந்தங்கள் பெரியது, நடுத்தரமானது, சிறியது என 3 வடிவங்களில் உள்ளது. ஒவ்வொன்றும் அதன் வடிவத்தை பொறுத்து சக்தியை பெற்றிருக்கிறது.



    உயர் ரத்த அழுத்தம், முதுகுவலி, வயிறு வலி, வயிற்று கோளாறுகள், கழுத்து, கணுக்கால், முழங்கால், தலைவலி என அனைத்து வலிகளுக்கும் காந்த பெல்ட் அணியலாம். காந்த பெல்ட்டை 1 மணி நேரம் முதல் 2 மணி நேரம் வரை அணிய வேண்டும். காந்த படுக்கையில் அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை படுக்கலாம். அவ்வாறு படுத்து ஓய்வு எடுப்பதால் உடல்வலி தீரும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும்.

    மின்காந்த அதிர்வுகளை உண்டாக்கும் பெல்ட்டுகளைக்கொண்டு, மின்காந்த சிகிச்சை அளிக்கப்படுகிறது. இத்தகைய பெல்ட்டுகள் ஒரு வித அதிர்வுகளை உண்டாக்கும். அதேபோல் இதமான வெப்பத்தை கொடுக்கும். சிகிச்சை பெறும் போது அதனை நன்கு உணரலாம்.

    வயிறு, முதுகுவலி இவற்றுக்கு 20 முதல் 30 நிமிடங்கள் வரை மின்காந்த பெல்ட்டுகள் அணிந்து சிகிச்சை எடுத்துக்கொண்டால் போதும். இந்த வித சிகிச்சையை பெறும்போது வியர்க்கும். பெல்ட் கட்டிய உடல் பகுதியில் சூடு தெரியும். ஆனால் காந்தங்களை கொண்டு அளிக்கப்படும் சிகிச்சையில் அதிர்வு, இதமான வெப்பம் இவற்றை நாம் உணரமுடியாது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வித்தியாசமின்றி அனைவரும் காந்த மற்றும் மின்காந்த சிகிச்சை பெறலாம்.

    தவிர்க்கவேண்டியவர்கள்

    இதய நோயாளிகள் காந்த சிகிச்சையை தவிர்க்க வேண்டும். அதேபோல் பெண்கள் மாதவிலக்கு காலத்திலும், காய்ச்சல் தாக்கிய நேரத்திலும், கர்ப்பிணிகளும் காந்த சிகிச்சையை தவிர்க்க வேண்டும்.

    புற்றுநோயாளிகள், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள், மூளை நரம்பு கோளாறுகள், மூக்கடைப்பு, நீர்கோர்த்தல், தலைவலி, வயிறு கோளாறுகளுக்கு காந்த சிகிச்சை எடுத்துக்கொள்ளலாம். இந்த சிகிச்சையை பெறும்போது கண்டிப்பாக மரத்தினால் ஆன நாற்காலி, மேசை இவற்றின் மீது அமர்ந்து, படுத்துதான் காந்த சிகிச்சை எடுக்க வேண்டும். அப்போது தான் மிகுந்த பலன் கிடைக்கும். அதேபோல் காந்த சிகிச்சை அளிக்க உதவும் உபகரணங்களை கண்டிப்பாக தரையிலோ அல்லது இரும்பாலான மேசையின் மீதோ வைக்கக்கூடாது. அவ்வாறு வைத் தால் அத்தகைய உபகரணங்களின் காந்த சக்தி குறையும். அதனால் அதிக பலன் கிடைக்காது.

    பழமையான சிகிச்சைமுறை

    காந்த சிகிச்சை என்பது பண்டைய காலம் தொட்டே நடைமுறையில் இருந்து வருகிறது. கி.பி.14-ம் நூற்றாண்டில் சீனா விலும், கி.பி.18-ம் நூற்றாண்டில் எகிப்திலும் காந்த சிகிச்சை அளிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் இந்தியாவில் கி.மு. 6-ம் நூற்றாண்டில் இருந்தே சித்தா, ஆயுர்வேதம் போன்ற மருத்துவ சிகிச்சைகளுடன் சேர்த்து காந்த சிகிச்சையும் அளிக்கப்பட்டுள்ளது என வரலாற்று பதிவுகள் கூறுகிறது. ஆனால் காலப்போக்கில் காந்த சிகிச்சை முறை மறைந்து விட்டது. இப்போது மீண்டும் புத்துயிர் பெற்றிருக்கிறது.

    விளக்கம்:

    டாக்டர் கல்யாணி,
    யோகா மற்றும் இயற்கை மருத்துவ பிரிவு,
    அரசு மருத்துவமனை திண்டுக்கல்.
    Next Story
    ×