search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஃபுட் பாய்சன் ஏற்பட காரணம் என்ன?
    X

    ஃபுட் பாய்சன் ஏற்பட காரணம் என்ன?

    பிடித்த உணவு என்று எதையும் பாராமல் சாப்பிடுவது தான் பின்னாளில் ஆபத்தாக முடிகிறது. சில வழிமுறைகளை பின்பற்றி வந்தால் உணவு ஒவ்வொமை வராமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம்.
    பிடித்த உணவு என்று எதையும் பாராமல் சாப்பிடுவது தான் பின்னாளில் ஆபத்தாக முடிகிறது. பெரும்பாலும் பலரும் விரும்பும் உணவாக இருப்பது எண்ணெய் உணவாக தான் இருக்கும். எண்ணெயிலிருந்து தான் பிரச்சனை ஆரம்பிக்கும். அப்பொருளை சாப்பிடும் முன் எண்ணெயில் இருந்து கெட்டுப்போன வாசனை வந்தால் அதை சாப்பிட வேண்டாம்.

    அதேபோல் நம்மிடம் தான் ஃபிரிட்ஜ் உள்ளதே என்று பிரோலில் துணி அடுக்குவது போல் உணவை அதில் அடுக்கி வைக்க வேண்டாம். கொஞ்சம் கொஞ்சமாக சமைத்து சாப்பிடுங்கள், மீதமுள்ளதை மட்டும் ஃபிரிட்ஜில் வைத்து சாப்பிடுங்கள். அதில் வைத்து கொள்ளலாம் என்று நினைத்தே சமைக்க வேண்டாம்.

    புரதம் அதிகமுள்ள பொருட்கள் எல்லாம் எளிதில் கெட்டுப்போக கூடியவை. வேர்கடலை, பால், எண்ணெய் உணவு வகைகள் எல்லாம் சீக்கிரமே கெட்டுப்போக கூடியவை. அதனை சேர்த்து வைத்து சாப்பிட்டாலே பாதிப்பு ஏற்படும்.

    எந்த ஒரு ஸ்நாக்ஸ் பொருட்களாக இருந்தாலும் அதனுடைய எக்ஸ்பைரி தேதியை பாருங்கள். அதனை பார்த்துவிட்டு பிறகு சாப்பிடுங்கள். குழந்தைகளுக்கு கொடுக்கும் போது முடிந்தவரை வீட்டில் தயார் செய்யும் ஸ்நாக்ஸ் பொருட்களையே கொடுக்கவும்.

    மழை, பனிக்காலத்தில் உணவுகள் கெட்டுபோகக் காரணமாக இருப்பவை பூஞ்சைகள். அரிசி, பருப்பு போன்றவற்றையில் உடனடியாக தாக்கும், அதனாலேயே உணவுகள் கெட்டுப்போவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    மளிகைப் பொருட்களில் ஈரப்பதம் இல்லாமல் பார்த்து கொள்ளவும். அதில் பூஞ்சைகள் இருப்பது தெரிய வந்தால், அதனை வெயிலில் உலர்த்தி மறுபடியும் பயன்படுத்துவர். ஆனால் அப்படி பயன்படுத்தினாலும் உணவு கெட்டுபோவதற்கு வாய்ப்புள்ளது.

    இவை போன்றவைகளை தவிர்த்தாலே உணவு ஒவ்வொமை வராமல் நமது உடலை பாதுகாத்து கொள்ளலாம்.
    Next Story
    ×