search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கண்ணாடிக்குடுவைகளில் உணவுப்பொருட்கள் சேமிப்பு
    X

    கண்ணாடிக்குடுவைகளில் உணவுப்பொருட்கள் சேமிப்பு

    நாம் வீடுகளில் ப்ளாஸ்டிக் பாத்திரங்கள், டப்பாக்கள் பயன்படுத்துகிறோம். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு இது நல்லதல்ல. இதற்கு மாற்றாக கண்ணாடிப் பொருட்களை உபயோகிப்பதால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம்.
    சமைத்த உணவு மட்டுமின்றி, உணவு தயாரிக்கத் தேவையான மளிகை பொருட்களையும் முறையாகவும் சுத்தமாகவும் பாதுகாத்து வைப்பது மிகவும் அவசியம். பெரும்பாலும் இன்றைய வீடுகளில் நாம் இதற்கு ப்ளாஸ்டிக் பாத்திரங்கள், டப்பாக்கள் மற்றும் குடுவைகளைத்தான் பயன்படுத்துகிறோம். ஆனால் உடல் ஆரோக்கியத்திற்கு இது நல்லதல்ல. மாற்றாக நாம் இதற்கு கண்ணாடிப் பொருட்களை உபயோகிப்பதால் என்ன நன்மைகள் என்று பார்ப்போம்.

    கண்ணாடி ப்ளாஸ்டிக்கை விட பாதுகாப்பானது

    ப்ளாஸ்டிக்கில் உள்ள ரசாயனங்கள் உணவுப் பொருட்களில் கலக்கும் வாய்ப்பு ஏற்படலாம். அதிக குளிர்ச்சி மற்றும் அதிக சூடான பொருட்களை ப்ளாஸ்டிக்கில் வைக்கும்போது, அதாவது ஃப்ரிட்ஜ் மற்றும் மைக்ரோவேவ் ஓவனில் வைக்கும்போது இந்த ரசாயன கலப்பு நடக்கும். ஆனால் கண்ணாடிப் பாத்திரங்கள் தான் மாற்றம் அடைவதில்லை. மேலும், அதன் தன்மை மற்ற பேரணுக்களை தன்னுள் அனுமதிக்காத மிகவும் கெட்டியான தன்மை கொண்டதாகும்.

    கண்ணாடி சூட்டை தாங்கக்கூடியது

    உணவை சமைத்த உடனேயே கண்ணாடி பாத்திரத்தில் மாற்றி விடலாம், பாத்திரத்தை மூடியும் வைத்துக் கொள்ளலாம். மீதம் உள்ள உணவை அப்படியே பிரிட்ஜில் சேமிக்கவும் இது பாதுகாப்பானது. நீண்ட நாட்களுக்கு மளிகை பொருட்களை சேமிக்கவும், அதன் நிறம் மற்றும் மணம் மாறாமல் இருக்கவும் கண்ணாடிக் குடுவைகள் சிறந்ததாக இருக்கும். பாத்திரத்தின் ரசாயனம் எதுவும் சூடான பொருளில் கலப்பதில்லை என்பதாலும் கண்ணாடிப் பாத்திரங்கள் நல்லது.



    பல் உபயோகம் கொண்டது கண்ணாடி

    ஒரே பாத்திரத்தில் மூடி போட்டு சேமித்தும் வைக்கலாம். சமைத்த உணவுப் பொருளை சூடாக போட்டும் வைக்கலாம் அல்லது சமைக்கவும் பயன்படுத்தலாம். அதே பாத்திரத்தை பிரிட்ஜ் அல்லது ஃப்ரீசரில் மிக குளிர்ச்சியாகவும் பாதுகாக்கலாம். கண்ணாடியில் உள்ள உணவுப் பொருளை அப்பாத்திரத்தில் வைத்தே பரிமாறலாம். இப்படி பல உபயோகங்களுக்கு கண்ணாடி பயன்படுகிறது.

    சுத்தம் மற்றும் வெளிப்படை தன்மை

    மளிகை மற்றும் உணவுப் பொருட்களை கண்ணாடிப் பாத்திரங்களில் சேமிக்கும்போது அதனை சுத்தப்படுத்துவது சுலபம். வாசனையோ, அழுக்கோ, கறையோ அதில் படிவதில்லை. மேலும் அதன் உள்ளே என்ன பொருள் இருக்கிறது என்பதை நாம் சுலபமாக தெரிந்துக் கொள்ளலாம். பொருட்கள் கெடத் துவங்கும்போதே அதை கண்டுபிடித்து அப்புறப்படுத்துவதும் சுலபம்.

    கண்ணாடிக் குடுவைகள் எவ்வளவு காலமானாலும் உடையாத வரையில் உபயோகப்படுத்தலாம். உணவுப் பொருட்களின் வாசனையையும், அது பெற்றுக் கொள்வதில்லை. பல வருடங்கள் தொடர்ந்து உபயோகப்படுத்தவும் ஏற்றது.
    Next Story
    ×