search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    ஆப்பிள் சைடர் வினிகரின் பயன்கள்
    X

    ஆப்பிள் சைடர் வினிகரின் பயன்கள்

    ஆப்பிள் சைடர் வினிகருடன் சிறிது தேன் கலந்து சிறிது நீர் சேர்த்து அருந்தினால் இருமல் வெகுவாய் கட்டுப்படும். ஆப்பிள் சைடர் பயன் குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஆப்பிள் சைடர் வினிகர்: ஆப்பிள் சைடர் வினிகர் என்பது ஆப்பிள், சர்க்கரை, பீஸ்ட் இவற்றினை சேர்த்து உருவாக்கப்படுவது. சாலட், சட்னி இவற்றில் இதனைச் சேர்ப்பர். ஆப்பிளை பிழிந்து அதன் சாற்றில் சில பொருட்களைச் சேர்த்து இதனை உருவாக்குவர். இதனில் சத்து என்று கூற எதுவும் இல்லை. இருப்பினும் இது இன்று அதிக அளவில் பேசப்படுகின்றது.

    காரணம் பொதுவில் வினிகர் என்றாலே தொண்டையில் கெட்ட பாக்டீரியாக்களை அழிக்க வல்லது. ஆப்பிள் சைடர் வினிகருடன் சிறிது தேன் கலந்து சிறிது நீர் சேர்த்து அருந்தினால் இருமல் வெகுவாய் கட்டுப்படும். வைரஸ் தாக்குதலால் ஏற்படும் இருமலுக்கு சிறிது தேனையே வெந்நீரில் கலந்து குடிக்கச் சொல்லி வெளிநாடுகளில் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

    சிறிதளவு அதாவது ஒரு டீஸ்பூன் ஆசிசி இதனை 1/2 கப் வெது வெதுப்பான நீரில் கலந்து விருந்து போன்ற அதிக உணவிற்கு முன்பு எடுத்துக் கொள்கின்றனர். இதனால் வயிற்றில் உப்பிசம் ஏற்படாது.

    நெஞ்செரிச்சல் பிரச்சினை இருப்பவர்களையும் 1 டீஸ்பூன் ஆசிசி+சிறிது தேன் + 1/2 கப் வெதுவெதுப்பான நீர் கலந்து குடிக்கச் சொல்கின்றனர்.

    சுட்டெரிக்கும் வெயிலில் சென்று வந்துள்ளீர்களா? குளிக்கும் நீரில் 1 கப் ஆசிசி சேர்த்து உடலில் ஊற்றி 10 நிமிடம் கழித்து குளித்து விட சருமம் பாதுகாக்கப்படும்.

    * கால்களை சுத்தம் செய்யும் பொழுது பூஞ்சை பாதிப்பு ஏற்படாதிருக்க வெதுவெதுப்பான நீரில் 1/2 கப் ஆசிவி சேர்த்து கால்களை 15 நிமிடம் ஊறவையுங்கள். பின்னர் கால்களை நன்கு கழுவி விடுங்கள்.

    * உடல் பயிற்சியினாலோ அல்லது பொதுவாகவோ ஒரு குறிபிட்ட சதைப் பகுதியில் வலி இருந்தால் அங்கு ஆசிசி தடவுங்கள்.

    * அதிக வெய்யிலால் உடலில் அரிப்பு இருந்தால் ஆசிசி தடவுங்கள். அரிப்பு வெகுவாய் மட்டுப்படும். பின்னர் நன்கு கழுவி விடுங்கள்.

    1 டீஸ்பூன் ஆசிசி+ 1/2 கப் வெது வெதுப்பான நீர் அருந்துவது சைனஸ் தொந்தரவிற்கு மருந்தாக இயற்கை வைத்தியம் கூறுகின்றது.

    * மேலும் நிணநீர் ஓட்டம் சீராய் இருக்கவும் உதவுவதாக வெளிநாட்டு இயற்கை வைத்தியத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    * காலையில் நீரில் கலந்து குடிக்க உடலின் சக்தி கூடுகின்றது.

    * உடற்பயிற்சிக்கு பின் ஏற்படும் சோர்வு நீங்குகின்றது.

    * பூஞ்சை பாதிப்பு வெகுவாய் கட்டுப்படுகின்றது.

    * அலர்ஜி மட்டுப்படுகின்றது.

    * தசைப் பிடிப்புகள் நீங்குகின்றன.

    * சருமம் சுத்தம் பெறுகின்றது.

    * ஆசிவியுடன் சிறிது நீர் சேர்த்து மாதம் ஒருமுறை பல்லில் தேய்க்க பல் பளிச்சிடுகின்றது. கண்டிப்பாய் அடிக்கடி செய்யக் கூடாது. பல் எனாமல் தேய்ந்து விடும்.

    * நீர் சேர்த்த ஆசிசி உடலில் மடிப்புகளில் தடவி கழுவ உடல் துர்நாற்றம் நீங்குகின்றது.

    * தலையில் தடவி கழுவ பொடுகு நீங்குகின்றது.

    * வாய் கொப்பளிக்க வாய் துர்நாற்றம் நீங்குகின்றது.

    * பாத்திரங்களை கூட சுத்தம் செய்யலாம்.

    * காய்கறிகளை கழுவலாம்.

    குறிப்பு:- ஆப்பிள் சைடர் வினிகர் 1 ஸ்பூன் + 1 கப் நீர் என்ற அளவிலேயே எப்பொழுதும் பயன்படுத்த வேண்டும்.

    * தினமும் உபயோகிக்க கூடாது.

    * மருத்துவரிடம் இதனை கூற வேண்டும்.

    * சருமத்தில் பயன்படுத்தினால் சிறிது தடவி எந்த அலர்ஜியும் இல்லாத பொழுதே பயன்படுத்த வேண்டும். 
    Next Story
    ×