search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நம் உடலின் ஆரோக்கியத்திற்கு காரணம்
    X

    நம் உடலின் ஆரோக்கியத்திற்கு காரணம்

    நம் உடலின் முழு ஆரோக்கியமும் நம் உணவு, தூக்கம், பரம்பரை சுற்றுப்புற சூழ்நிலை, வாழ்க்கை முறை, உடலிலிருந்து நச்சுக்களை நீக்கி நாம் வாழும் முறை இவற்றினைப் பொறுத்தே அமைகின்றது.
    நம் உடலின் முழு ஆரோக்கியமும் நம் உணவு, தூக்கம், பரம்பரை சுற்றுப்புற சூழ்நிலை, குடும்ப உறவுகளின் ஆரோக்கியம், வாழ்வின் சுறுசுறுப்பு, வாழ்க்கை முறை, உடலிலிருந்து நச்சுக்களை நீக்கி நாம் வாழும் முறை இவற்றினைப் பொறுத்தே அமைகின்றது.

    இவற்றில் நம் உடலில் சேரும் திசுக்களில் சேரும் கழிவுகளை அவ்வப்போது நாம் நீக்கவில்லை என்றால் காலப் போக்கில் அவை நச்சுக்களாக மாறி உடலில் நோய் பாதிப்பினை ஏற்படுத்தி விடும்.

    கல்லீரல் ஜீரண உறுப்புகளின் ஒரு பகுதி 500க்கும் மேற்பட்ட வேலைகளை பார்ப்பது இதன் பொறுப்பு.

    * பித்த நீர் உற்பத்தி செய்து கொழுப்பு, புரதம், போன்ற இவற்றினை உடைத்து குடலில் உடனடி எளிதாய் உறிஞ்ச உதவுகின்றது.

    * வைட்டமின் கே உறிஞ்சப் பித்த நீர் மிக அவசியமாகின்றது. வைட்டமின் கே இல்லாவிடில் ரத்தம் கசிவு ஏற்பட்டால் கூட நிற்காது. ரத்தப் போக்கு இருந்து கொண்டே இருக்கும்.

    * கார் போன்ற டிரேட்டுகளை உடைத்து குளுகோசாக மாற்றி ரத்த ஓட்டத்தில் செலுத்தி திசுக்கள் அதனை எடுத்துக் கொண்டு செயல்படுகின்றன. அதிக குளுகோஸ்களை கோனாம் கல்லீரலில் சேமிக்கப்பட்ட தேவைப்படும் நேரத்தில் வைட்டமின் தாது, உப்புகளை பாதுகாத்து வைக்கின்றது. வைட்டமின் ஏ. பி12, டி, ஈ, கே மற்றும் இரும்பு காப்லர் போன்ற தாது உப்புகளை சேமித்து குறைபாட்டின் போது உதவுகின்றது.

    ரத்தத்தினை வடிகட்டி நச்சினை நீக்கி சுத்திகரிக்கின்றது. நோய் எதிர்ப்பு சக்தியினைக் கூட்டுகின்றது. இப்படி எண்ணற்ற கல்லீரல் செயல்களை அடுக்கிக் கொண்டே போகலாம்.

    நம்மைத்தாக்கும் பல நோய்கள் கல்லீரலை பாதிக்கலாம்.

    * வைரஸ் தாக்குதல்

    மதுவால் ஏற்படும் கொழுப்பு நிறைந்த கல்லீரல், மது இல்லாமல் உணவால் ஏற்படும் கொழுப்பு நிறைந்த கல்லீரல், பித்த குழாய்கள் பாதிப்பு கல்லீரல் இறுகுதல், அதிக சர்க்கரை யால் ஏற்படும் பாதிப்பு என பல வகை பாதிப்புகள் ஏற்படலாம்.

    மேலும் ஊசி மூலம் மருந்து செலுத்துவதில் சுகாதாரமின்மை பச்சை குத்தி கொள்ளுவதில் சுகாதாரமின்மை ரசாயனங்கள், சர்க்கரை நோய், கூடுதலான எடை பொட்டாசியம் குறைபாடு ஆகியவைகளும் கல்லீரல் குறைபாட்டினை ஏற்படுத்தலாம்,

    மிக அதிகமாக பல்வேறு தாக்குதல்களுக்கும் ஈடு கொடுக்கும் கல்லீரலுக்கும் தாக்கு பிடிப்பதற்கும் ஒரு அளவு உண்டு அல்லவா.

    கல்லீரல் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளாக மஞ்சள் காமாலை ஏற்படலாம், வயிற்றில் வலி, வீக்கம் ஏற்படலாம். கால் கணுக்காலில் வீக்கம் ஏற்படலாம்.

    * சருமத்தில் அரிப்பு ஏற்படலாம்
    * சிறுநீர் அடர்ந்து இருக்கலாம்
    * ரத்தம் அல்லது கறுநிற வெளிப்போக்கு இருக்கலாம்.
    * அதிக சோர்வு ஏற்படலாம்.
    * எப்பொழுது தூங்க வேண்டும் என்ற உணர்வு இருக்கலாம்.
    * வயிற்று பிரட்டல், வாந்தி, பசியின்மை இருக்கலாம்.
    * குழப்பமான உணர்வு இருக்கலாம்.

    * மூட்டுவலி, ரத்த கொதிப்பு, மன உளைச்சல் போன்றவைகளும் அறிகுறிகளாக இருக்கலாம்.
    இத்தகு பாதிப்புகள் இருப்பின் அலட்சியப்படுத்தாமல் உடனே மருத்துவரை அணுகுவதே நல்லது. தவிர்ப்பு முறையாக கீழ்க்கண்டவைகளை பின் பற்றலாம்.
    * அதிகம் பதப்படுததப்பட்ட உணவுகளைத் தவிருங்கள்.

    * காய்கறி ஜூஸ் அருந்துங்கள்- காரட், பீட்ரூட், முட்டைகோஸ், புடலை, பீர்க்கை இவைகளில் ஏதேனும் ஜூஸ் அன்றாடம் எடுத்துக் கொள்ளலாம்.
    எலுமிச்சை, புதினா, கொத்தமல்லி, இவற்றினையும் ஜூசாக எடுத்துக் கொள்ளலாம்.

    கீரை, பூண்டு, வெள்ளரி, தர்பூசணி இவற்றினையும் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். உங்கள் உணவில் பொட்டாசியம் சத்து இருக்க வேண்டும். பீன்ஸ், பீட்ரூட், பசலை, கரும்பு ஜூஸ், சர்க்கரை வள்ளி, தக்காளி, வாழைப்பழம் இவற்றினை நன்கு எடுத்துக் கொள்ளுங்கள். இது சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் இதனை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளுங்கள். கண்டிப்பாய் ஆல்கஹாலினை தவிர்த்து விடுங்கள்.

    இஞ்சி, மஞ்சள். பட்டை, லவங்கம் இவற்றினை நம் முன்னோர்கள் நன்கு உணவில் சேர்த்தனர். ஆரஞ்சு பழம், குடை மிளகாய், காரட், வெள்ளரி, ஆப்பிள் இவையும் நவீன விஞ்ஞான ஆய்வின் சிபாரிசாக கல்லீரல் பாதுகாப்பாக பரிந்துரைக்கப்படுகின்றது. 
    Next Story
    ×