search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கோடையில் முதியோர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள்
    X

    கோடையில் முதியோர்களுக்கு ஏற்படும் உடல் உபாதைகள்

    கோடையில் முதியோர்களுக்கு மிக எளிதில் உடலில் நீர் வறட்சி ஏற்படும். மேலும் முதியவர்களுக்கு அதிக சூடு ஆபத்தானதாகவும் இருக்கும் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
    கோடையில் பிள்ளைகள் வீட்டிற்கு வருவதும் வீடு கலகலவென்று இருப்பதும் முதியவர்களுக்கு அதிக மகிழ்ச்சியினைத் தரும்தான். ஆனால் முதியவர்களுக்கு அதிக சூடு ஆபத்தானதாகவும் இருக்கும் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    * முதியவர்களுக்கு மிக எளிதில் உடலில் நீர் வறட்சி ஏற்படும். ஏனெனில் போதுமான அளவு நீரினை பருகும் திறமை அவர்களுக்கு இராது. தாகத்தினை அதிகம் உணர மாட்டார்கள். அதிக சூடு அவர்களால் சிறிதும் தாங்க முடியாது. ஆகவே அவர்களுக்கு யாராவது அடிக்கடி தண்ணீர் தர வேண்டும்.

    * பொதுவில் அதிக சூடு இருக்கும் காலத்தில் எண்ணெய், மசாலா இவற்றினை அடியோடு தவிர்த்து எளிய, கனமில்லாத உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

    * கோடை காலத்தில் அவர்களுக்கு அளிக்கப்படும் மருந்துகள் பற்றி மீண்டும் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.

    * சிறிது உஷ்ண அதிகரிப்பும் முதியோரின் ஆயுளுக்கே மிக பிரச்சினையாக மாறலாம். ஆகவே அவர்களை வெளியில் அழைத்து செல்வதில் மிக மிக கவனம் தேவை. ஆக அவர்கள் மீது கூடுதல் கவனம் தேவை.

    * நீங்கள் வேலைக்கு செல்பவராக இருந்தால் உங்கள் வீட்டு முதியோரைப் பற்றி அக்கம், பக்கம் வீட்டு நண்பர்களின் உதவியினை இக்காலத்தில் பெறுங்கள்.



    * அவசர உதவிக்கு என்னென்ன போன் செய்ய வேண்டும் என ஒரு ‘சார்ட்’ எழுதி ஒட்டி வையுங்கள்.

    * அவர்களுக்கு மெல்லிய பருத்தி ஆடை, கண்களை பாதிக்காத சூரிய வெளிச்சம் ஆகியவை இருக்குமாறு செய்யுங்கள்.

    * ‘ஹீட் ஸ்ட்ரோக்’ ஏற்படாத வகையில் கவனம் கொள்ள வேண்டும்.

    * 104 செல்சியதற்கு மேல் உடல் உஷ்ணம், * குழப்பம், எரிச்சல், * வறண்ட சருமம், * வயிற்று பிரட்டல், வாந்தி, * தலைவலி, * வேகமான மூச்சு, * வியர்வை இன்மை, * மயக்கம், * அதிக வியர்வை.

    இவை அனைத்தும் அவசர சிகிச்சை அளிக்கப்பட வேண்டிய அறிகுறிகள் ஆகும்.

    * சன் ஸ்கீரின் பயன்படுத்துங்கள்.

    * கொசு, பூச்சி தொல்லை இல்லாது அவர்களது படுக்கை இருக்க வேண்டும்.

    * விடியற்காலையில் வெளியில் நடக்கலாம். அல்லது வீட்டுக்குள்ளேயே நடக்க வேண்டும்.

    * தனிமை, நோய், சில மருந்துகள், சிறுநீரக கோளாறு இவை முதியோருக்கு கோடையில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தலாம்.
    Next Story
    ×