search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    கேன்சர் வருவதற்கான காரணமும், சிகிச்சை முறைகளும்...
    X

    கேன்சர் வருவதற்கான காரணமும், சிகிச்சை முறைகளும்...

    புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ சிகிச்சை நிபுணர், புற்றுநோய் கதிர் இயக்க சிகிச்சை நிபுணர் ஆகியோர் அடங்கிய குழுவில் நோயாளிகளின் ஆய்வு அறிக்கைகள் ஆராயப்பட்டு சிகிச்சை பற்றி பரிந்துரைக்கப்படுகிறது.
    கேன்சர் ஒருவருக்கு வரும் போது மரணம் நிச்சயம் என்ற கருத்து சமூகத்தில் உள்ளது. ஆனால் உண்மை நிலையோ வேறு. இன்று 50 சதவிகித புற்றுநோயாளிகள் முற்றிலும் குணப்படுத்தப்படுகிறார்கள். மேலும் 25 சதவிகித புற்றுநோயாளிக்கும் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடிகிறது. நமது உடல் கோடிக்கணக்கான செல்களால் ஆக்கப்பட்டவை. வீடு பல ஆயிரம் செங்கலால் கட்டப்பட்டதுபோல நமது உடல் பல கோடிக்கணக்கான செல்களால் ஆனது.

    இந்த செல்கள் வளரும் மற்றும் அழியும் தன்மையும் உடையது. இதுவே செல் சைக்கிள் என்று அழைக்கப்படுகிறது. சில காரணிகள் செல்லை தாக்கும் போது செல் அழியாமல் வளர்ந்து கொண்டே ஒரு கட்டியாக மாறுவதே கேன்சர் என்று அழைக்கப்படுகிறது. உடலில் எந்த உறுப்பினிலும் கேன்சர் வரலாம். உடலில் முடி, பல் மற்றும் நகம் தவிர மற்ற எந்த உறுப்பிலும் வரலாம்.

    இந்த கட்டிகள் ஒரே ஒரு உறுப்பில் இருக்கும் போது லோக்கல் கேன்சர் என்று அழைக்கப்படுகிறது. இந்த கேன்சர் சிறிது காலத்தில் மற்ற உறுப்பிற்கு ரத்தக்குழாய் மூலமாகவும், நிணநீர்க் குழாய் மூலமாகவும் பரவும். இதுவே செகன்டரி கேன்சர் என்று அழைக்கப்படுகிறது.

    புற்றுநோய் சிகிச்சை முறைகள்

    புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர், மருத்துவ சிகிச்சை நிபுணர், புற்றுநோய் கதிர் இயக்க சிகிச்சை நிபுணர் ஆகியோர் அடங்கிய குழுவில் நோயாளிகளின் ஆய்வு அறிக்கைகள் ஆராயப்பட்டு சிகிச்சை பற்றி பரிந்துரைக்கப்படுகிறது. பரிந்துரைத்த படி சிகிச்சையில் புற்று நோய் சிறப்பு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது, இன்றைய நவீன உலகில் புற்றுநோயை குணப்படுத்த என்னென்ன சிகிச்சை முறைகள் உள்ளன. அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை, மருத்துவ சிகிச்சை.

    அறுவை சிகிச்சை என்பது கட்டியையும், அதனருகில் உள்ள நிணநீர் மூடிச்சுகளையும் அகற்றுதல்,

    கீமோதெரபி என்பது புற்றுநோய் மருத்துவ சிகிச்சையைக் குறிக்கும். பொதுவாக மருந்துகளை வாய் மூலமாகவோ, ஊசிகளின் மூலமாகவோ உடலின் உட்செலுத்தி, புற்றுநோயைக் கட்டுப்படுத்தி, குணப்படுத்த முயல்வது. கீமோதெரபி ஒவ்வொரு நோய்க்கும் நோயின் தன்மைக்கேற்ப மாறுபடும். பொதுவாக 21 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்.

    -குரு மருத்துவமனை, பாண்டிகோவில் ரிங்ரோடு, மதுரை. 88702 63655
    Next Story
    ×