search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி?
    X

    இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவது எப்படி?

    உணவு பழக்க வழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் ஒருசில விஷயங்களை கடைப்பிடித்தால் உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
    ரத்த அழுத்தம் உலகளாவிய பொது சுகாதார பிரச்சினையாக உருவெடுத்துக்கொண்டிருக்கிறது. 2025-ம் ஆண்டுக்குள் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிப்புக்குள்ளாகிறவர்களின் எண்ணிக்கை 21.4 கோடியாக உயரும் என்று தெரியவந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது, மது, புகையிலை பொருட்களை பயன்படுத்துவது, வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது போன்றவை உயர் ரத்த அழுத்தம் தோன்ற முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. இந்தியர்களில் ஐந்தில் ஒருவருக்கு உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கான அறிகுறிகள் இருக்கின்றன. ஆரம்பத்திலேயே கண்டறியாவிட்டால் பின்னாளில் பாதிப்புகளை அதிகப்படுத்திவிடும். குறிப்பாக இதயம் சார்ந்த நோய் பாதிப்புகள் அதிகமாகத் தோன்றும்.

    உணவு பழக்க வழக்கங்களிலும், வாழ்க்கை முறையிலும் ஒருசில விஷயங்களை கடைப்பிடித்தால் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.

    உடல் ஆரோக்கியம், உயர் ரத்த அழுத்தத்தில் இருந்து பாதுகாக்கும். அதற்காக தினமும் குறைந்த பட்சம் உடற்பயிற்சிக்கு 30 நிமிடங்களையாவது ஒதுக்க வேண்டும். உடற்பயிற்சி ஆக்சிஜன் இயக்கத்தை மேம்படுத்தும். இதயத்துக்கும் பாதுகாப்பு கொடுக்கும்.


    சாப்பாட்டில் உப்பின் அளவை குறைத்து கொள்ள வேண்டியது அவசியம். ருசிக்காக உப்பை அதிகம் சேர்ப்பது கூடாது. அது உயர் ரத்த அழுத்த பிரச்சினைக்கு வழிவகுத்துவிடும்.

    உணவில் இஞ்சி சேர்ப்பதை வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும். அதற்கு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் இருக்கிறது. ரத்த ஓட்டத்திறனையும் மேம்படுத்தும். ரத்த நாளங்களை சுற்றியுள்ள தசைகள் சீராக செயல்பட உதவும். இஞ்சியை பயன்படுத்தி சூப், தேனீர் தயாரித்தும் பருகலாம்.

    கொழுப்பை குறைத்து, ரத்த அழுத்தத்தை சீராக்கும் திறன் பூண்டுக்கு உண்டு. ரத்த குழாய்கள் இறுகுவதை தடுப்பதில் பூண்டு முக்கிய பங்காற்றுகிறது. அதனால் தினமும் பூண்டுவை சேர்த்துக்கொள்வது அவசியம்.

    கருமை நிற சாக்லேட்டுகள் சாப்பிடுவதும் நல்லது. அதுவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவும். அதனால் தினமும் சிறிதளவு கருப்பு நிற சாக்லேட் ருசிப்பது நல்லது.
    Next Story
    ×