search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    நோயும், யோகாவும்...
    X

    நோயும், யோகாவும்...

    தியானம் மனதையும், உடலையும் நலப்படுத்தும் என்பது உண்மை. யோகாவும் ஒருவகையில் உடற்பயிற்சிதான். ஆரோக்கியமாக இருக்கும் உடல், யோகாவால் இன்னும் மேம்படும் என்பதில் ஐயமில்லை.
    நவீன வாழ்க்கையில் பொருளாதார நெருக்கடி, குடும்ப தேவைகள் நோக்கிய ஓட்டம் காரணமாகப் பலரும் மன அமைதியை இழக்கின்றனர். பொதுவாக எதிலும் பிடிப்பற்று ஒதுங்கிப்போகும் மனிதர்கள் பெருகிவிட்டனர்.

    சோகமான மனநிலை, கவலை, மனஇறுக்கம், மனஅழுத்தம் பலரையும் பாதிக்கிறது. இன்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதில் தொடங்கும் ஓட்டமும் பதற்றமும் நாள் முழுவதும் முடிவதில்லை. ஏதாவது பொருளை வாங்கு, பயன்படுத்து, ரசனையை மாற்று, தூக்கியெறி, புதிய பொருளை வாங்கு என்ற நுகர்பொருள் பண்பாட்டு தாரக மந்திரம் எல்லாவற்றையும் சந்தைப்படுத்திவிட்டது. இந்த சூழலில் பல்வேறு பிரச்சினைகளால் அல்லல்படும் மனிதன், மன உளைச்சலுக்கு ஆளாகிறான். இதனால் உடலிலும் மனதிலும் ஏற்படும் நோய்கள் பெரிதும் மனதையே பாதிக்கின்றன.

    நுரையீரலின் வேலை சுவாசம் போல, மூளையின் வேலை மனம் சார்ந்தது என்பது உளவியலாளர் கருத்து. உடல் உறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளை கண்டறியும் மனம், அதற்கு பிரச்சினை என்றால் குழம்பிப் போகிறது. மனதை பற்றிக் காலங்காலமாக தத்துவஞானிகளும் ஆன்மிகவாதிகளும் நிரம்ப சொல்லி உள்ளனர்.

    மனிதன் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை யோகா, தியானம் மூலம் தீர்க்க முடியும் என பிரசாரம் செய்யும் வழக்கம் பெருகி வருகிறது. இன்னும் சிலர் உடல் நோய்களைக்கூட யோகா, தியானம் மூலம் குணப்படுத்திவிட முடியும் என்கின்றனர்.

    பொதுவாக விவசாய வேலைகளில் ஈடுபடும் கிராம மக்கள் ஆரோக்கியமாக வாழ்கின்றனர் என்பதுதான் உண்மை. மருந்து, யோகா, தியானம் மூலம் உடலை வளப்படுத்தலாம் என்று சித்தர்களும் யோகிகளும் கருத்தை முன்வைத்தனர். தியானம் மனதையும், உடலையும் நலப்படுத்தும் என்பது உண்மை. யோகாவும் ஒருவகையில் உடற்பயிற்சிதான். ஆரோக்கியமாக இருக்கும் உடல், யோகாவால் இன்னும் மேம்படும் என்பதில் ஐயமில்லை.

    அதே நேரத்தில் நோய்வாய்ப்பட்ட உடலுக்கும், மனதுக்கும் மருத்துவ சிகிச்சை கட்டாயம் தேவை. அறுவை சிகிச்சை தேவைப்படும் நிலையிலுள்ள நோயாளிகள், நிச்சயம் மருத்துவரின் ஆலோசனையையே பெற வேண்டும்.
    Next Story
    ×