search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தீர்க்க ஸ்வாச முத்திரை பிராணாயாமம்
    X

    தீர்க்க ஸ்வாச முத்திரை பிராணாயாமம்

    இப்பிராணாயாமம் சுவாச காற்றை ஆழமாக இழுத்து வெளியிட உதவுவதால் தீர்க்க ஸ்வாச முத்திரை பிராணாயாமம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.
    பெயர் விளக்கம் : இப்பிராணாயாமம் சுவாச காற்றை ஆழமாக இழுத்து வெளியிட உதவுவதால் தீர்க்க ஸ்வாச முத்திரை பிராணாயாமம் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

    செய்முறை : அனுகூலமான தியான ஆசனத்தில் அமரவும். (குறிப்பாக வஜ்ராசனத்தில் செய்வது நல்லது) கண்களை மூடவும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும்.

    இப்போது மேலே கொடுக்கப்பட்டுள்ள தீர்க்க ஸ்வாச முத்திரை செய்து மார்புக்கு முன்பாக மார்போடு ஒட்டியபடி கை கட்டை விரல்களை வைக்கவும். இரு நாசிகளின் வழியாக நிதானமாகவும், ஆழமாகவும் மூச்சுக் காற்றை உள்ளே இழுக்கவும். ஓரிரு வினாடிகள் மூச்சை அடக்கவும். பிறகு நிதானமாக இரு நாசிகளின் வழியாக மூச்சுக் காற்றை வெளியே விடவும். இது ஒரு சுற்றுப் பயிற்சியாகும்.

    மூச்சை உள்ளே இழுக்கும்போது மார்பை விரிக்கவும். மூச்சை வெளியே விடும்போது மார்பு சம நிலைக்கும், அடி வயிற்றை ஓரளவு உள்ளுக்கும் சுருக்கவும். மூச்சுக் காற்றை உள்ளுக்கு இழுக்கும்போது காற்றை உள்ளுக்கு இழுப்பதற்கு ஏற்ப நிதானமாக, தானாகவே மார்பு விரிய வேண்டுமே தவிர நாமாகவே மார்பை உயர்த்தக் கூடாது.

    ஆரம்பப் பயிற்சியில் சில வாரங்கள் 10 முதல் 15 சுற்று பயிற்சி என செய்து வந்து தொடர்ந்த பயிற்சியினால் சுற்றுகளை அதிகப்படுத்திக் கொண்டு போய் 30 சுற்றுகள் வரை பயிற்சி செய்யலாம்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம் : சுவாச இயக்கத்தின் மீதும், அனாஹத சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    பயன்கள் : சுவாச உறுப்புகள் மற்றும் இருதயம் சம்பந்தமாக பல நோய்களுக்கு நன்மை அளிக்கிறது. நுரையீரலும் இருதயமும் நன்கு வலுப்பெறும். தாறுமாறான சுவாச இயக்கம் மற்றும் இருதயத் துடிப்பு சம நிலைக்கு வரும். ரத்தத்திலுள்ள கழிவுகள் நீங்கும். ரத்தம் தூய்மை அடையும். சருமம் பொலிவு பெறும். முக அழகு அதிகரிக்கும்.
    Next Story
    ×