search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    வருத்திக்கொண்டு உடற்பயிற்சி செய்ய வேண்டாம்
    X

    வருத்திக்கொண்டு உடற்பயிற்சி செய்ய வேண்டாம்

    எந்த ஒரு பயிற்சி செய்தாலும் அதை நேசித்துச் செய்வதும், உடலும் மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பதும் முக்கியம்.
    உடற்பயிற்சி என்பது அன்றாடம் செய்ய வேண்டியது. அது ஒரு வேலை என்பதைவிட அது ஒரு வாழ்க்கைமுறை என்ற புரிதல் அவசியம். எந்தக் காரணத்துக்காகவும் உடற்பயிற்சியைத் தவிர்க்காதீர்கள். ஓரிரு நாட்கள் தவறினாலும் மறுநாள் உடற்பயிற்சிக்குச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் தீவிரமாக இருங்கள். உடற்பயிற்சி என்பது வாழ்வில் ஒரு அங்கம் என்று மாறும்போது நம் உடல் வலுவாக இருக்கும்.
     
    உடற்பயிற்சி செய்து முடித்த பிறகு உடலில் கொஞ்சம் வலி இருந்தால் அன்று நாம் முழுமையாக உடற்பயிற்சி செய்தோம் என்பதாக சிலர் நம்புகிறார்கள். இது உண்மையில்லை. உங்களை வருத்தும் எதுவும் உங்கள் உடலுக்கோ மனதுக்கோ உவப்பானது அல்ல. நிச்சயமாக உடற்பயிற்சி என்பது உடலை வருத்துவது அல்ல. உங்களுக்கு மகிழ்ச்சியூட்டும், ஆர்வத்தைத் தூண்டும் பயிற்சிகளை முதலில் செய்யத் தொடங்குங்கள். அதற்காக உடல் சோர்ந்துபோகும்படி வெகுநேரம் அந்தப் பயிற்சியையே செய்துகொண்டு இருப்பதும் தேவை இல்லாதது.

    எந்த ஒரு பயிற்சி செய்தாலும் அதை நேசித்துச் செய்வதும், உடலும் மனமும் முழு ஈடுபாட்டில் இருப்பதும் முக்கியம். வருத்திக்கொண்டு பயிற்சி செய்வதால், உடல் விரைவில் சோர்வடையும். இது மனதின் உற்சாகத்தையும் பாதித்து உடற்பயிற்சி என்பதற்கே டாட்டா சொல்ல வைத்துவிடும். ‘வியர்ப்பது முக்கியம்; வருத்துவது தேவை இல்லை’ இதுதான் உடற்பயிற்சியின் அடிப்படை விதி. இதைத் தவறாமல் பின்பற்றுங்கள்.
    Next Story
    ×