search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    உடல் ஆரோக்கியத்திற்கு இப்படியும் உடற்பயிற்சி செய்யலாம்
    X

    உடல் ஆரோக்கியத்திற்கு இப்படியும் உடற்பயிற்சி செய்யலாம்

    சில சிறந்த பொழுது போக்குகளை உடற்பயிற்சி போல் செய்தால் ஆரோக்கியம் கூடும் என்பது மருத்துவ உண்மை. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    சில சிறந்த பொழுது போக்குகளை உடற்பயிற்சி போல் செய்தால் ஆரோக்கியம் கூடும் என்பது மருத்துவ உண்மை. சிறிது நேரம் அன்றாடம் பொழுது போக்கு மனிதனுக்குத் தேவை. அவையே ஆரோக்கியமும் அளிக்கிறதென்றால் அவைகளைப் பற்றி அவசியம் அறிந்து கடை பிடிப்போம்.

    டான்ஸ்: இங்கு நான் கூறும் டான்ஸ் என்பது அனைவரும் பரதம் பயில வேண்டும் என்பதல்ல. அது அவரவர் விருப்பத்தினைப் பொறுத்தது. நவநாகரீக உடை, ஹை ஹீல்ஸ், ஷீ அணிந்து ஆடும் நடனமும் அல்ல. இங்கு உங்களுக்குத் தேவையானதெல்லாம் உங்கள் கால்கள், நீங்கள் ரசிக்கும் இசை. வேண்டுமெனில் ஓரிரண்டு நண்பர்கள், நீங்கள் நடனம் ஆட உங்கள் வீட்டில் சிறிய இடம் அவ்வளவே. தரமான வாக்கிங் ஷீ கூட அணிந்து கொள்ளலாம்.

    இதனை பல உடற்பயிற்சி நிறுவனங்களிலும் சொல்லித் தருகின்றார்கள். இருப்பினும் இந்த காலத்தில் சிறு குழந்தை கூட இசைக்கேற்ப தன் உடலை அசைத்து ஆடுகின்றது. ஆக ஒரு அறையில் தினமும் சிறிது நேரம் நீங்கள் ஆடுவது உங்கள் இருதயத்தினை பலப்படுத்துகின்றது. உங்கள் சக்தியினை கூட்டுகின்றது. எலும்புகளும், தசைகளும் உறுதி பெறுகின்றன. உங்கள் மூளையின் ஞாபகத்திறன் கூடுகின்றது. மறதி 76 சதவீதம் குறைகின்றது என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.

    தோட்ட வேலை: முதலில் தோட்ட வேலை செய்யுங்கள் என்பது உடற்பயிற்சிக்காக மட்டுமே அறிவுறுத்தப்பட்டது. புல் எடுப்பது, குனிந்து நிமிர்ந்து வேலை செய்யும் பொழுது அனைத்து தசைகளும் உபயோகப்படுத்தப்பட்டு உறுதி பெறுகின்றன. இவர்களுக்கு வைட்டமின் டி குறைபாடு அதிகம் ஏற்படுகின்றதாம். மறதி பாதிப்பு 36 சதவீதம் குறைகின்றதாம். மாரடைப்பு, பக்கவாதம் இவை 30 சதவீதம் குறைகின்றதாம். சிறிய இடமாக இருந்தாலும் சிறு தொட்டிகள் வைத்து சில கொடி, செடிகளை வளர்க்கலாமே.

    எந்த நேரமும் பேனாவும், பேப்பருமாகவும், கம்ப்யூட்டர் முன்னாள் அமர்வதும் உடலுக்கு ஆரோக்கியமில்லைதான். ஆனால் எழுதுவது உடல், மன ஆரோக்கியத்திற்கு நல்ல பயன்களைத் தருகின்றது என்பது ஆய்வுகளின் கூற்று. தினமும் 20 நிமிடங்கள் ஏதேனும் ஒன்றினைப் பற்றி எழுதுங்கள்.

    இசை ஒரு மருந்து: இசை கருவி வாசிப்பது, இசை கேட்பது இவை உங்களது நரம்பு மண்டலத்தினை மிக ஆரோக்கியமாய் வைக்கின்றதாம். நீங்கள் பாட வேண்டும் என்ற தேவையில்லை. இசையினை ரசிக்கத் தெரிந்தாலே போதுமானது. இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கூடுகின்றது. மன அழுத்தம், பரபரப்பு இவை இருக்காது என ஆய்வுகள் கூறுகின்றன.
    Next Story
    ×