search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளுக்கு போடும் தடுப்பூசியின் நன்மைகளும், அவசியமும்..
    X

    குழந்தைகளுக்கு போடும் தடுப்பூசியின் நன்மைகளும், அவசியமும்..

    தாய்மார்கள், குழந்தைகளின் தடுப்பூசி அட்டவணையை சரியாக மருத்துவரிடம் கேட்டு பெற்று கொண்டு அதை குழந்தைகளின் 5 வயது வரை சரியாக பின்பற்ற வேண்டும்.
    பொதுவாக ஊசி என்றால் குழந்தைகளுக்கு அலர்ஜி தான். ஆனால், தடுப்பூசி என்பது நம் ஆரோக்கிய வாழ்விற்கு மிக அவசியமாகும். தடுப்பூசியினால் ஏற்படும் நன்மைகள், தீமைகள் பற்றி செந்திலாண்டவர் மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் தெய்வேந்திரன் கூறும்போது,

    முன்பெல்லாம் அம்மை நோய், கக்குவான் இருமல், தொண்டை அடைப்பான் இருமல், காலரா, நிம்மோனியா போன்ற நோய்களினால் இறப்பு சதவிகிதம் அதிகம். தடுப்பூசி என்பது கண்டறியப்பட்ட பின்பு இந்த நோய்களில் சிலவற்றை முற்றிலும் அழிக்க முடிந்தது. தடுப்பூசியினால் மற்ற நோய்களும் வராமல் தடுக்க முடியும்.

    உதாரணமாக, மூளைக்காய்ச்சல் நோய், மஞ்சள் காமாலை நோய், ஏ வகை மற்றும் பி வகை, காலரா, நிம்மோனியா, தட்டம்மை, பெரியம்மை, டைபாய்டு மிக முக்கியமாக ஸ்வைன்புளு பெண்களுக்கு பெருங்கொடுமை விளைவிக்கும். கர்ப்பப்பை கேன்சர் நோய் ஆகிய நோய்களுக்கு தடுப்பூசி உள்ளது. இப்போது உலகளவில் ஆராய்ச்சியில் எச்.ஐ.வி. நோய்க்கும் டெங்கு வைரஸ் நோய்க்கும் தடுப்பூசி கண்டறியப்பட்டதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    தாய்மார்கள், குழந்தைகளின் தடுப்பூசி அட்டவணையை சரியாக மருத்துவரிடம் கேட்டு பெற்று கொண்டு அதை குழந்தைகளின் 5 வயது வரை சரியாக பின்பற்ற வேண்டும். சரியான முறையில் தடுப்பூசி எடுக்கவில்லை என்றால் நாம் இந்த மாதிரியான நோய்களுக்கு ஆளாக வேண்டியதிருக்கும்.

    ஆகவே தடுப்பூசி எடுத்து கொள்வோம். நோய்களில் இருந்து விடுபடுவோம். நோயற்ற வாழ்வை குழந்தைகளுக்கு அளிப்பது பெற்றோர்களின் கடமை.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×