search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    தேர்வின் போது மாணவர்களே, மன பதட்டத்தை விரட்டுங்கள்
    X

    தேர்வின் போது மாணவர்களே, மன பதட்டத்தை விரட்டுங்கள்

    பல மாணவர்கள் தேர்வின் பொழுது பதட்டமாகவும், மனச்சோர்வுடனும் இருப்பார்கள். மிதமான பதட்டம் நம் செயலை செய்ய உதவும், இந்த பதட்டம் அதிகமாகும் பொழுது அது நமது செயல்பாட்டை பாதிக்கும்.
    “முடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை !!
    முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை !!
    முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை !!

    தேர்வு எழுதும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துக்கள். தேர்வு நாள் நெருங்க நெருங்க பதற்றம் அடைவது இயல்பு தான். ஆனால் இது அளவுக்கு அதிகமாக மாறும் பொழுது எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படும். தன்னம்பிக்கை குறையும்.

    பல மாணவர்கள் தேர்வின் பொழுது பதட்டமாகவும், மனச்சோர்வுடனும் இருப்பார்கள். மிதமான பதட்டம் நம் செயலை செய்ய உதவும், இந்த பதட்டம் அதிகமாகும் பொழுது அது நமது செயல்பாட்டை பாதிக்கும். மனச்சோர்வு, பதட்டம் அடைவது ஒரு மனம் நலம் சார்ந்த விஷயம். மிக அதிகமான பதட்டம் தேர்வு எழுதும் செயல்பாட்டையும் பாதிக்கிறது. இந்த பதட்டமான சூழ்நிலை மாணவர்களுக்கு மாணவர் வேறுபடும். சில மாணவர்களுக்கு தலைவலி, சிலருக்கு பட்டாம்பூச்சி பறப்பது போல் உணர்வு, சிலருக்கு தேர்வு எழுதும்போது கவனச்சிதறல் ஏற்படும்.

    தேர்வின் பொழுது மாணவர்களுக்கு ஏற்படும் பதற்றம் :

    மனப்பதற்றம் சிறிய அளவு முதல் பெரியளவு வரை மனதை பாதிக்கக்கூடும். சில மாணவர்கள் தேர்வுக்கு முன் பீதி அடைவார்கள். இது அவர்களுக்கு (தனக்கு) மட்டுமே நடக்கிறது என்று நினைப்பார்கள். ஆனால் எல்லா மாணவர்களும் தேர்வு சமயத்தில் இது போன்ற பதட்டத்தை (மனது படபட என துடிக்கும்) ஏதோ ஒரு வகையில் எதிர்கொண்டிருப்பர்.

    உடல் ரீதியான அறிகுறிகள்:


    உடலில் வியர்வை வியர்ப்பது, வேகமான இதயத்துடிப்பு, மயக்கம், வாந்தி, அடிக்கடி பேதியாவது போன்ற உணர்வுகள் என்று பல அறிகுறிகள் தென்படும் . இந்த பதட்டம் மாணவர்களை கடுமையாக தாக்கும் பொழுது உடலுக்கு நோய்த்தொற்று ஏற்படும்.

    அறிவாற்றல் மற்றும் நடவடிக்கை:


    எதிர்மறையான எண்ணங்கள் கொண்டால் தேர்வின்போது கவனச்சிதறல் மற்றும் அதிகப்படியான இதயத்துடிப்பை உணர்வார்கள். பல மாணவர்கள் அதிகப்படியான பதட்டத்தினால் கேள்வித்தாள் வாங்கி அதனை படித்த உடன் தேர்வுத் தாளில் தனக்குத் தெரிந்த விடையை எழுதாமலேயே வந்துவிடுவார்கள். பதட்டத்தின் காரணமாக எல்லா கேள்விகளுக்கும் விடை தெரிந்திருந்தும் தேர்வுத்தாள் களில் பதில் எழுதாமலேயே வந்துவிடுவார்கள்.

    உணர்ச்சிவசப்படுதல்:

    மனப்பதற்றம், சுயமதிப்பு இல்லாமை, கோபம், நம்பிக்கையின்மை இவைகளே மாணவர்கள் குறைந்த மதிப்பெண் பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்து விடுகின்றது. அதற்கான காரணத்தைத் தெரிந்து கொண்டு அதனை நீக்கினால் இந்த பிரச்சினையை தடுக்கலாம்.

    நினைவாற்றலை மேம்படுத்தும் வழிகள்:

    நேர்மையான சுய உறுதிமொழி கொண்ட வாசகங்களை ஒவ்வொரு கருத்துக்கும் (கான்செப்ட்), சமன்பாடுகளுக்கும், எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கருத்துக்கு ஒரு நேர்மறையான உறுதிமொழியை அதனுடன் பொருத்தி நினைவுபடுத்திக் கொண்டால் நினைவாற்றல் மறக்காமல் இருக்கும். உதாரணமாக ‘என்னால் முடியும’ என்ற வாசகத்தை ஒரு கருத்துக்கு பொருத்திப் படிப்பதினால் கணித சூத்திரத்திற்கு பயன்படுத்தி பார்ப்பதன் மூலம் எளிதில் நினைவுபடுத்திக் கொள்ளலாம். மிகக் கடினமான சமன்பாடுகளைக் கூட எளிதாக நினைவில் வைத்துக்கொள்ள முடியும். நேர்மையான சுய உறுதிமொழி 2 அல்லது 3 வாக்கியமாக இருத்தல் அவசியம்.

    குழந்தைகளுக்கு தேர்வின் பொழுது ஏற்படும் மன பதட்டம் படிப்பை சார்ந்து மட்டுமே இருப்பது இல்லை , வேறு பல காரணங்களும் உள்ளன. இப்பொழுது மாணவர்கள் படிப்பதற்காக விடுமுறையில் இருப்பார்கள். வீட்டின் சூழ்நிலை மற்றும் பெற்றோர்களின் அரவணைப்பு அவர்களின் பதட்டத்தை குறைக்கும் கருவியாக இருப்பது அவசியம்.

     இடைவெளி இல்லாமல் தொடர்ச்சியாக படித்து கொண்டே இருந்தால் மூளை சோர்வடைந்து விடும். மேலும் அளவுக்கு அதிகமான தகவல் என்னும் நிலைக்கு தள்ளிவிடும். சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டால் விபத்து உண்டாவதை போலவே, மூளைக்கு மிக அதிக வேலை பளு கொடுத்தால் உடலுக்கும் மனதிற்கும் சோர்வை ஏற்படுத்தும். இதனால் பதின் பருவத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வினால் மன அழுத்தம் உண்டாகும்.

    தினமும் 45 நிமிடம் படிப்பு மற்றும் 15 நிமிடம் ஒய்வு என்ற விகிதத்தில் படித்தால் மனமும் உடலும் புத்துணர்ச்சியாக இருக்கும்.இந்த ஓய்வு எடுக்கும் இடைவெளியில் ஸ்மார்ட் போன் பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. அன்றைய தினம் படித்து முடித்த பின் சிறிது நேரம் கைபேசி உபயோக படுத்தலாம். சமூக வலைத்தளங்கள் தன் வலையில் சிக்க வைக்க உங்களை ஒன்றன்பின் ஒன்றாக நிறைய தளத்திற்கு தாவ வைக்கும். ஆகையால் நீங்கள் ஸ்மார்ட் ஆக இதில் இருந்து தப்பிக்க, பாடல்கள் கேட்கலாம், மோட்டிவேஷனல் ஸ்பீச் பார்க்கலாம், மெடிடேஷன் பண்ணலாம்.

    தினமும் சிறிது நேரம் உடற்பயிற்சி செய்தால் மூளைக்கும் உடலுக்கும் சக்தி கொடுக்கும். நேரம் இல்லை என்று சொல்லாமல் என் ஆரோக்கியத்திற்கு தினமும் 15 நிமிடம் உடற்பயிற்சி செய்வேன் என்று உங்களுக்குள் சொல்லிக்கொள்ளுங்கள். மாடி படி ஏறி இறங்குவது, ஸ்கிப்பிங், மாடியில் அல்லது வீட்டில் பேசி கொண்டே நடப்பது , குழந்தைகளுடன் விளையாடுவது, இப்படி பல நடவடிக்கைகள் நமது உடலை சுறுசுறுப்பாக வைக்கும் மூளைக்கு ரத்த ஓட்டமும் அதிகரிக்கும். நடப்பதை உடற்பயிற்சி என்று சொல்வதை விட இது நம் உடலுக்கு தேவையான அசைவு என்று சொல்லலாம்.

    தேர்வு என்பது நீங்கள் ஒரு வருடமாக படித்த பாடத்தை படித்து எழுதுவதாகும்.. பின்பு இதற்கான மதிப்பீடுவழங்கப்படும். பள்ளியில் நிறைய திருப்புதல் தேர்வு வைத்து இருப்பார்கள். எந்த தலைப்பு உங்களுக்கு கடினமானதாக இருக்கிறதோ அதை மீண்டும் மீண்டும் எழுதிப்பாருங்கள். அல்லது முக்கிய வார்த்தையை நினைவில் வைத்து பயிற்சி செய்து பாருங்கள்.

    நீங்கள் உங்களாலான அனைத்து முயற்சியும் செய்து தேர்வை எழுத தயார் நிலையில் உள்ளீர்கள்.‘என்னால் முடியும்’ போன்ற தன்னம்பிக்கை வாசகத்தை அடிக்கடி மனதுக்குள் சொல்லி பாருங்கள். உங்கள் முகத்தை கண்ணாடியில் பார்த்து புன்னகையுடன் சொன்னால் இன்னும்புத்துணர்ச்சி உண்டாகும். பத்து வருடம் கழித்து உங்கள் மதிப்பென்களை யாரும் நினைவில் வைத்து இருக்க மாட்டார்கள். உங்களது நல்லொழுக்கம் தான் உங்களை வாழ்க்கையில் வெற்றி பெற உதவும்.

    தேர்வு எழுதும் விதிமுறைகள் மற்றும் அனைத்து தேவைகளையும் உறுதி செய்து கொள்ளுங்கள். தேர்வு எழுதும் பள்ளியின் பாதையை முன்கூட்டியே சென்று நேரத்தை கணக்கிட்டுக்கொள்ளுங்கள். பதினைந்து நிமிடம் முன்னதாகவே செல்வது பதட்டத்தை தவிர்க்கவும் மற்றும் நிதானமாக தேர்வை எதிர் கொள்ள உதவும்.

    தேர்வுக்கு படிக்கும் பொழுதும், தேர்வின் பொழுதும் தண்ணீர் அருந்துவதால் உடலுக்கு தேவையான நீர் சத்து கிடைக்கும்

    மற்றும் நேர்மறையான மனநிலை (positive mood) உண்டாகும். Self-affirmations காலையில் எழுந்ததும் சில சுய உறுதிமொழிகளை உங்களுக்குள் சொல்லி பழகுங்கள், உதாரணமாக :

    1. என் மேல் எனக்கு நம்பிக்கை உள்ளது, நான் தேர்வை நன்றாக எழுதுவேன்.
    2. என்னால் முடியும், என்னால் கண்டிப்பாக முடியும்
    3. புதிய நாள், புதிய வாய்ப்பு, புதிய தொடக்கம், இந்த நாள் இனிய நாள்
    vcopevandhana@gmail.com
    Next Story
    ×